சொல்வதெல்லாம் உண்மை போலவே வேறு ஒரு சேனலில் பங்கேற்ற வனிதா – வீடியோ இதோ.

0
116378
- Advertisement -

வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தான். கடந்த சில வாரங்களாகவே சமூக வளைதளத்தில் ஒரு சர்ச்சையான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்தாலும், லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வனிதா தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்த பின்னர் தான் இந்த விவகாரம் சமூக வளைதளத்தில் மேலும் வைரல் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வீடியோவில் 2:30 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

லட்சுமி ராமகிருஷ்ணன் விவகாரத்திற்கு பின்னர் சமூக வலைதளத்தில் தன்னை தொடர்ந்து திட்டி வீடியோ போட்டிருந்த சூர்யா தேவி மீது புகார் கொடுத்த வனிதா காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த வனிதா பேசிய போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போலவே லட்சுமி ராமகிருஷ்ணன் பண்ணக்கூடிய அதே நிகழ்ச்சியை செய்ய முதலில் எனக்கு தான் வாய்ப்பு வந்தது.

- Advertisement -

கலைஞர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை செய்ய என்னைத்தான் முதலில் பேசினார்கள். அதுதான் உண்மை, அதை அவர்களால் மறுக்க முடியாது. இப்படி ஒரு நிலையில் மற்றவர்கள் வாழ்க்கையில் சென்று விளையாடுவதும் கருத்துக்களை கூறுவதும் விமர்சிப்பதும் அதை உலகமே பார்த்து சந்தி சிரிக்கும் அளவிற்கு செய்வது இது போன்ற சில நிகழ்ச்சிகள் தான் என்று கூறியிருந்தார்.

ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு முன்னதாகவே வனிதா, பாலிமர் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை போன்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் பெயர் ‘சக்தி கொடு’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால்,, இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதா அல்லது வெறும் ப்ரோமோ மட்டும்தான் வெளியானதா என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement