மீராவிற்கு குரு வனிதா தான் – இவங்களுக்கு இதான் வேலை. வறுத்தெடுத்த பிரபலம்.

0
620
meera
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதாவின் மூன்றாவது திருமணம் தான். ஆனால், தற்போது அந்த பிரச்சனை அடங்கிய நிலையில் மீரா மிதுனின் சர்ச்சை தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படி பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் இருவரின் சர்ச்சைகள் அடுத்தடுத்து கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் மீரா மிதுன் இப்படி பல பெரிய பிரபலங்களை பற்றி இப்படி பேசுவதற்கு எல்லாம் முன்னோடி வனிதா அக்கா தான் என்று கூறியுள்ளார் ஜோ மைக்கேல்.

-விளம்பரம்-
joe

ஜோ மைக்கேல் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே அழகி பட்டத்தை வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக பலர் புகார்களை அளித்தனர். அதில் ஒருவர் தான் ஜோ மைக்கேல். மீரா மிதுன் குறித்து தொடர்ந்து பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு வரும் ஜோ மைக்கேல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.

- Advertisement -

அப்போது அவரிடன், மீரா மிதுன் விஜய் சூர்யா துவங்கி கமல் வரை பலரை பற்றி எதாவது கூறிக் கொண்டு வருகிறாரே என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, இதற்கெல்லாம் குருவாநந்தா, நித்யாநந்தா மாதிரி குருவானந்தா யார் என்று பார்த்தால் அது வனிதா அக்கா தான். அவங்க எப்படின்னா அவங்கள கேள்வி கேக்குற எல்லாரையும் அசிங்கமா பேசி இதற்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்து கொண்டு இருகாங்க. அதனால் வனிதா அக்காவோட பிரென்ட்டான மீராவும் அப்படி தான் முன்னோடியாக திகழ்வார்.

வீடியோவில் 5 நிமிடத்தில் பார்க்கவும்

அவங்கள யாராவது நீ தப்பு பண்ற மன்னிப்பு கேளுமா அப்படினு சொன்ன, உடனே அவங்கள இப்படி பேசிடுவாங்க. இதை இவங்க காலம் காலமா செஞ்சிட்டு வராங்க. அவங்களும் யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டாங்க, இவங்களும் கொடுக்க மாட்டாங்க. மரியாதை என்றால் என்ன என்று சுத்திகொண்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஜோ மைக்கேல்.

-விளம்பரம்-
Advertisement