அட, நடிகர் சஞ்சீவ், வனிதாவிற்கு இப்படி ஒரு சொந்தமாம். இது தெரியுமா உங்களுக்கு.

0
1600
sanjeev
- Advertisement -

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதா பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். மேலும், வனிதா விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதேபோல நடிகை வனிதா அறிமுகமான இதே படத்தில் விஜய்யின் நண்பராக நடித்த சஞ்சீவ் கூட வனிதாவுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

-விளம்பரம்-

நடிகர் சஞ்சீவ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் அறிமுகமானார் அதன்பின்னர் சந்திரலேகா நிலாவே வா பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் சஞ்சீவ்.

- Advertisement -

சினிமா மட்டுமல்லாது இவர் சின்னத்திரையிலும் பிரபலம் தான்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் சஞ்சீவ்.

நடிகர் சஞ்சீவ், வனிதாவிற்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். எப்படியெனில் வனிதாவின் அம்மாவான மறைந்த நடிகை மஞ்சுளாவின் சகோதரி யின் மகன் தான் சஞ்சீவ். ஆனால், இதுவரை இதை அடிக்கடி சஞ்சீவ் எங்கேயும் சொன்னது இல்லை.

Advertisement