சமூக வளைதளத்தில் எந்த பக்கத்தை புரட்டி பார்த்தால் தற்போது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவின் திருமண சர்ச்சை குறித்து பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து வனிதாவை திட்டி தீர்த்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு வந்தார் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவி மீது வனிதா அளித்திருந்த புகாரின் பேரில் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
நேற்று இரவு 7 மணிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சூர்யா தேவி நேற்று இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே இருந்தார். பின்னர் இன்று மதியம் ஜாமீனில் வெளியே வந்த சூர்யா தேவி வனிதாவுக்கு போலீஸ் ஆதரவாக செயல்படுவதாகவும், வனிதா மீது நான் அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் போலீசார் ஏன் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார். கைது செய்யப்பட்ட பின்னர் இனி வனிதா பற்றி பேசமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த சில மணி நேரத்தில் வனிதா குறித்து பேசி மீண்டும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் சூர்யா
அதில், என்னை எல்லாம் உள்ளே தூக்கிப் போட்டுவிட்டு வெளியில் வந்தால் மீண்டும் பேச மாட்டேன் என்று சில சாக்கடைகள் எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறது. நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று கடவுளுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும்,எனக்கும் தெரியும். அதனால் ரொம்ப ஓவராக ஆடக்கூடாது. மூஞ்சிக்கு நேராக வந்து ஒரு லைவ்வில் கூட வந்து பேச முடியவில்லை. நீ எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சவுண்ட் போட்டுக் கொண்டிருக்கிற.
இன்னமும் நீ என்னை பெரிய ஆளாக மாற்றிக்கொண்டு தான் இருக்கிறாய். அதை மட்டும் நன்றாக தெரிந்து கொள். எதற்கும் நான் அசருவதாக இல்லை என்னை சாதாரணமாக எடை போட்டு விடாதே. இத்தனை நாளாக இந்த சூர்யா தேவியை நீ சும்மா தான் பார்த்துக் கொண்டிருந்தாய். இனிமேல் தான் உன்னை நல்லா வெச்சி செய்யப்போறேன். இவ்வளவு நாள் நீ ட்ரெய்லரை தான் பார்த்துக் கொண்டிருந்தாய் இனிமேல்தான் நீ மெயின் பிக்சரை பார்க்கப் போகிறாய் என்று சவால் விட்டுள்ளார் சூர்யா தேவி.