மான நஷ்டயீடு கேட்டு வனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன். அதுக்குன்னு இத்தனை கோடியா ?

0
53049
lakshmi
- Advertisement -

வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தான். கடந்த சில வாரங்களாகவே சமூக வளைதளத்தில் ஒரு சர்ச்சையான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்தாலும், லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வனிதா தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்த பின்னர் தான் இந்த விவகாரம் சமூக வளைதளத்தில் மேலும் வைரல் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் மற்ற பிரபலங்களை போல லட்சுமி ராமகிருஷ்ணனும் வனிதாவின் திருமணம் குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பீட்டர் பவுலின் மனைவி பங்கேற்ற பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்றபோது வனிதா மற்றும் பீட்டர் பால் அளித்த பேட்டியை கண்டு தலையில் அடித்துக் கொண்டார். இதனால் கடுப்பான வனிதா,, லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்து இருந்தார்.

இதையும் பாருங்க : கருப்பு உள்ளாடையில் போஸை கொடுத்து ரசிகர்களை எங்கவிட்ட ஷிவானி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனும் அவரது கணவர் ராமகிருஷ்ணனும் வனிதா மீது புகார் அளித்திருக்கிறார்கள். மேலும் அந்த புகாரில் நகல் ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார் நாஞ்சில் விஜயன். வனிதாவுக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்த நிலையில் தன்னை அவதூறாக பேசிய வனிதாவிடம் மான நஷ்டம் கேட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். எவ்வளவு தெரியுமா 1 கோடியே 25 லட்ச ரூபாய். அதுவும் இதனை 7 நாட்களில் செலுத்த வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த நோட்டீசை வெளியிட்டுள்ள வனிதா, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து அதில் ஏதோ நாட்டாமை செய்து தற்போது என்னை மிரட்டி ஒரு கோடி 25 லட்சம் கேட்கிறார்கள் இதுதான் சமூகப் போராளியின் உண்மை முகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement