விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பல்வேறு சர்ச்சையான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் மிகவும் முக்கியமான ஒருவராக திகழ்ந்து வந்தவர்தான் நடிகை வனிதா கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி களில் எந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று உள்ளது அதற்கு முக்கிய காரணமே இந்த சீசனில் நடந்தேறிய பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் தான் அதற்கு முழு முதல் காரணமாக இருந்து வந்தார் நடிகை வனிதா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மூத்த மகள் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான்.
, பிக் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு நபராக தான் இருந்து வந்தார் வனிதா. இதற்கு முக்கிய காரணமே இவர்களது குடும்பத்தில் நடந்த பிரச்சினைதான். வனிதா கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், இவரது இரண்டாம் திருமணத்தில்இவரது பெற்றோர்களுக்கும் இவரது இரண்டாம் திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. அதனால் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது.இது ஒருபுறமிருக்க வனிதாவுக்கும் ஆகாஷுக்கு பிறந்த ஸ்ரீஹரி, யாரிடம் வளர்வது என்று நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வந்தது. ஆனால், வனிதாவின் பெற்றோர்கள் ஸ்ரீஹரி தங்களுடன் வளரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறிவந்தனர்.
இதனால் வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்.வனிதாவின் தாயார் மஞ்சுளா இறந்த பிறகு வனிதாவை குடும்பத்தினர் வனிதாவும் சுத்தமாக தங்களது குடும்பத்தில் சேர்ப்பது கிடையாது.
பிக் நிகழ்ச்சிக்கு முன்பாக விஜயகுமார் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார் வனிதா. ஆனால், அந்த வீட்டை காலி செய்ய வேண்டும் என்று விஜயகுமார் கூறியதும், வனிதா பெரும் பிரச்சினையை செய்திருந்தார். அந்த செய்தி சமூகத்தில் பரவலாக பரவி வந்தது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருக்கும் வனிதா, அருண் விஜயை இரண்டு முறை பார்ட்டிகள் சந்தித்தபோது அவரிடம் பேசியதாக தெரிவித்திருக்கிறார். மேலும், அவரிடம் முதல் முறை நேராகச் சென்று பேசிய போது அவர் இங்கு பேச வேண்டாம் நாம் வேறு இடத்தில் பேசிக் கொள்வோம் என்று சொன்னார்.
பின்னர் இரண்டாவது முறை அவரை வேறு ஒரு பார்டியில் சந்தித்தபோது நானாகச் சென்று சாதாரணமாக எப்படி இருக்கிறீர்கள் அண்ணா என்று பேசினேன். அவரும் சிரித்து விட்டு நலம் என்று இரண்டு நிமிடத்தில் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டார். அவர் என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால், வெளியில் இருப்பவர்கள் தான் எங்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார்கள். அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்னிடம் பேசாமல் சென்றிருக்கலாம் ஆனால் அவர் யாருக்காகவோ பகிர்ந்து தான் என்னிடம் தாங்கி பேசுகிறார் என்று கூறி இருக்கிறார் வனிதா.