அவர் சொல்றது எல்லாம் பொய், யார் யாரோ வந்து போறாங்க – வனிதா மீது குவியும் புகார்கள்.

0
37214
- Advertisement -

வனிதாவின் திருமண சர்ச்சை தான் கடந்த சில வாரங்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா மீது ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி இருவரும் புகார் அளித்த நிலையில் சமீபத்தில் சென்னை போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் வனிதா கொரோனா காலத்தில் முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா தோட்டா காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

-விளம்பரம்-

நிஷா தோட்டா அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் நடிகை வனிதா மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வனிதா வசித்து வரும் அதே அப்பார்ட்மென்டில் வசித்து வரும் நசீர் என்பவர் நாஞ்சில் விஜயனின் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் பேசியுள்ள அவர், அனுமதி வாங்காமல் நிறைய பேர் வனிதாவின் வீட்டிற்கு வந்து செல்கிறார்கள், இதனால் எங்களுக்கு கொரோனா வரும் என்ற பயம் இருக்கிறது. மேலும் வனிதா அளித்த பேட்டி ஒன்றில் எங்கள் அபார்ட்மெண்ட்டில் இருக்கும் யாருக்கும் கொரோனா இல்லை என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால், அது எல்லாம் சுத்தமாக போய், எங்கள் அபார்ட்மென்ட்டிலேயே 40 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. மேலும் கொரோனா சமயத்தில் எப்படி வனிதா அத்தனை பேரை வைத்து தனது வீட்டில் அந்த நிகழ்ச்சியை நடத்தினார் என்பது தெரியவில்லை. அவர் வசிக்கும் வீடு சொந்த வீடுகூட கிடையாது. மேலும், அந்த வீட்டின் உரிமையாளரிடம் கூட இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப் போகிறேன் என்ற அனுமதி கூட வாங்கவில்லை. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்கள் தலையிட வில்லை .எங்களில் பயம் என்னவென்றால் அவரின் வீட்டுக்கு அடிக்கடி யார் யாரோ வந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதனால் எங்களுக்கு கொரோனா பரவி விடுமோ என்ற பயம் இருக்கிறது. அவர் மீது புகார் அளித்ததற்கு முக்கிய காரணம் அப்பார்ட்மெண்ட் கீழே இருக்கும் ஒரு இடத்தில் போட்டோ ஷூட்டை நடத்தியிருந்தார். அங்கே குழந்தைகள் எல்லாம் கூட விளையாடுவார்கள். ஆனால், இவர்கள் கைகளை வைத்து சும்மாவா இருப்பார்கள் என்று கூறியுள்ளார். அதே போல வனிதா மீது கொடுத்த புகாருக்கு இன்னும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை, விரைவில் எடுப்பார்கள் என்று தெரிவித்து இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement