விக்கி – நயன் வாடகை தாய் விவகாரம் – விமர்சித்தவர்களை வெளுத்து வாங்கிய வனிதா.

0
383
vanitha
- Advertisement -

விக்னேஷ் சிவன் – நயன்தாராவிற்கு ஆதரவாக வனிதா போட்டிருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர்.

-விளம்பரம்-

தற்போது இருவருமே படங்களில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது, நயன்தாராவும், நானும் அம்மா- அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது.

- Advertisement -

இரட்டை குழந்தை பெற்ற நயன்:

உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எங்களுக்காக வேண்டும் என்று கூறியிருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இருந்தாலும், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பின் நயன்-விக்கி வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நயன்-விக்கி தரப்பில் இருந்து எதுவும் கூறவில்லை.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்:

தற்போது சோசியல் மீடியாவில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் இரட்டை குழந்தை குறித்த சர்ச்சை தான் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து சமீபத்தில் அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் குழந்தை விதிமுறைக்குட்பட்டதாக கூட இருக்கலாம்.

-விளம்பரம்-

வனிதா டீவ்ட்:

இதை DMS மருத்துவத் துறையினர் மூலம் பரிசீலனை செய்யப்படுகிறது. அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தான் குழந்தை பெற்றிருக்கிறார்களா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்த பிறகு தான் தெரியும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து வனிதா அவர்கள் பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, அன்பான பெற்றோருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளின் பிறப்பை விட அழகானது என்ன இருக்க முடியும். ஒருவருடைய வாழ்க்கையின் மிக அழகான தருணங்களை கெடுப்பவர்களை முதலில் சட்டப்படி தண்டிக்க வேண்டும். லீகல் தெரியும், மருத்துவம் தெரியுமென்று சில மதிப்பில்லாத கோமாளிகள் பேட்டி கொடுப்பதும், ட்வீட் போடுவதும் திருந்தவே மாட்டீங்களா? கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நயன்-விக்கி குறித்து சொன்னது:

யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். முட்டாள்கள் ஆகிய நீங்கள் இதையெல்லாம் விட்டுவிடப் போகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஒரு அழகான பெற்றோராக மிகவும் மகிழ்ச்சியான பயணத்தை தொடங்குங்கள். யார் என்ன சொன்னாலும்? நீங்கள் அதை கண்டு கொள்ளாதீர்கள். குழந்தைகளை பெறுவது நீங்கள் செய்த மிக சிறந்த விஷயம். குழந்தைகளுடன் தகுதியான அன்புடனும், அக்கறையுடனும் ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement