வனிதா வீடீயோவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் – ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் பதில்.

0
2030
kasthuri
- Advertisement -

நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா மற்றும் பீட்டர் பவுலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின அதுவும் பீட்டர் பால் குடித்துவிட்டு அவளிடம் பிரச்சனை செய்ததால் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார் என்று தயாரிப்பாளர் ரவீந்திரன் கூட தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அதேபோல பல்வேறு இணைய தளங்களில் கூட வனிதா பீட்டர் பவுல் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார் வனிதா.

-விளம்பரம்-

அதே போல நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்த வனிதா, என்னுடை வீட்டை நான் சிதைத்து விட்டேன் என்று நினைப்பவர்களுக்கு, என்னுடைய வீட்டை, பல ஆண்டுகளாக குடும்பம் மற்றும் வீடு இல்லாத நபரை வைத்து உருவாக்கினேன். அவருக்கு வலிகள் இருந்தது அதே போலத்தான் எனக்கும். கொரோனா பேரிடர் முதல் மீடியாக்கள் வேண்டுமென்றே எங்கள் வாழ்க்கையில் செய்த சில சர்க்கஸ் வரை நாங்கள் இருவரும் மோசமான நேரங்களில் சிரித்து காதலித்து வாழ்ந்தோம்.அவர் மீது அக்கறை காட்டுவது தான் வேலையாக இருந்தது. அவரை பிரியும் வலியை என்னால் ஏற்க முடியவில்லை. இன்றும் அதே வலியுடன் தான் இருக்கிறேன்.உங்கள் அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது தற்போது நான் மிகப்பெரிய ஒரு சவாலை எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.

- Advertisement -

அன்பு ஒன்றுதான் நான் விரும்புவது, ஆனால் அது என்னிடமிருந்து சென்றுவிடும் என்று பயப்படுகிறேன். இந்த சவாலை என்னுடைய வேலை மற்றும் குழந்தைகளை பாதிக்காமல் இருக்கும் வண்ணம் நான் எதிர் கொள்வேன். என்னுடைய வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து கொண்டு இருக்கிறது. இது ஒன்றும் எனக்கு புதிதானது இல்லை. காதலில் தோற்பது என்பது எனக்கு பழக்கமாகிவிட்டது. ஆனால், அதையெல்லாம் கடந்து நான் மேலும் நலமாக இருக்கிறேன்.காதலை நம்பி அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள் தரக்கூடிய வலி மிகவும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு வலி. உங்கள் கண்முன்னாலேயே உங்கள் வாழ்க்கையை தொலைப்பது என்பது மிகவும் வலி தரக்கூடியது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் வனிதாவின் இந்த வீடீயோவை கலாய்த்துள்ளார் கஸ்தூரி. சமீயத்தில் ட்விட்டரில் ரசிகர் ஒரு கஸ்தூரிக்கு ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘கஸ்தூரி, காலை வணக்கம், வனிதாவின் நேற்றைய வீடீயோவை பற்றி என்ன நினைக்கிறீர்கள். “என்னடா இவன் காலையிலேயே நம்ம வாயை புடுங்குகிறான்” என தவறாக நினைத்து விடாதீர்கள்’ என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்க்கு பதில் அளித்த கஸ்தூரி, வீடியோ வேறயா? பாத்துட்டு சொல்றேன். கண்டிப்பாக அது சொல்வதெல்லாம் பொய் ரகத்தில் தான் இருக்கும் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ட்வீட் போட்ட கஸ்தூரி, அடக்கடவுளே இப்பதான் கண்ணீர் வீடியோவை பார்த்தேன். நல்லா எடிட் பண்ணி ஸ்டைலா டைட்டில் கார்டு எல்லாம் போட்டிருக்காங்க. சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்றது என்ன பொழைப்பு புரியல டா சாமி? எல்லாம் பொய் தற்புகழ்ச்சி, எல்லாரும் கெட்டவங்க வனிதா மட்டும்தான் பாதிக்கப்பட்டவர். எல்லாமே எதிர்பார்த்தது தான். ஆனால், எலிசபெத்தை குறை சொல்வது ஏன் ? நம்பவே முடியவில்லை. இதுல நாலு விளம்பர இடைவேளை வேற, இந்த வீடியோ மூலம் நல்ல வருமானம் பார்த்திருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement