கடவுளுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்குனு நீ இப்படி சொல்லுவியா ? – நீ என்ன விளக்கு வச்சி பாத்தியா ? வனிதாவை வறுத்தெடுத்த பீட்டர் மனைவி.

0
2997
vanitha

பிக் பாஸ் வனிதாவுக்கும், பீட்டர் பவுல் என்பவருக்கும் ஜூன் 27 திருமணம் நடைபெற்றது. வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. பீட்டர் பவுல் தனக்கு விவாகரத்து தாராமலே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார் அவரது முதல் மனைவி. இந்நிலையில் வனிதா, பீட்டர் பாலின் திருமணம் குறித்து பீட்டரின் முதல் மனைவி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, வனிதாவின் யூ டுப் வீடியோவை பார்த்தேன். அதில் அவர்கள் எங்களுக்கு கல்யாணமே நடக்க வில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். கிறிஸ்துவ முறைப்படி என்னென்ன செய்யணுமோ எல்லாம் செய்து தான் அவர்கள் திருமணம் செய்து இருக்கிறார்கள். அன்பை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் இருவருமே வீட்டில் பிள்ளைகள் முன்பு பண்ணி இருக்கலாம்.

அதற்கு ஏன் முப்பது, நாற்பது பேரை கூப்பிட்டு வைத்துக் கொண்டு கிறிஸ்டியன் முறைப்படி செய்யணும். பிறகு அடுத்த நாள் வனிதா எனக்கு கல்யாணம் முடிந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது இதில் எது உண்மை?? இதற்கு காவல்துறை தான் சரியான முடிவை எடுக்க வேண்டும். நானும் என் கணவரும் பிரிந்ததற்கு காரணம் அவர்களுடைய குடிப்பழக்கம் தான். ஆனால், அவருக்கு குடி பழக்கம் இல்லை என்பது சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். இதற்கான ஆதாரங்களைக் கூட நான் காண்பிப்பேன். இதெல்லாம் நிரூபிக்க என்னால் முடியும். அதுமட்டுமில்லாமல் அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்தது.

இதையும் பாருங்க : என் கூட இருந்தவங்க போய் கொரோனா டெஸ்ட் எடுங்க – வீடியோ வெளியிட்ட வாணி ராணி நடிகை.

- Advertisement -

18 வருடமாக அவருடன் வாழ்கிறேன் நான் சொல்வது உண்மையா? இல்லை இப்போது ஆறு மாதம் வந்திருப்பவர்கள் சொல்வது உண்மையா? நீங்களே புரிந்துகொள்ளுங்கள். பிரபலங்கள் என்ன வேணாலும் சொல்லுவார்கள் அதெல்லாம் நியாயமாகுமா? அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை கிடையாது. என்னிடம் நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் உள்ளது. எனக்கு அவரை அசிங்க படுத்த வேண்டியது கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டபூர்வமாக தான் முடிவெடுக்க வேண்டும். அதற்காக தான் நான் போராடுகிறேன். என்னுடைய மாமியாருக்கு என்னுடைய கணவர் செய்த செயல் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால், அவர்கள் என்னுடைய மாமியார் சம்மதம் தெரிவித்தார் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் சுத்தமான பொய். அவர்களுடைய கல்யாணத்திற்கு பீட்டர் வீட்டிலிருந்து ஒருவர் கூட வரவில்லை.

vanitha

அவங்க நேத்து யூடியூபில் மிடில் கிளாஸ் குடும்பத்தை பத்தி ரொம்ப இழிவாக பேசினாங்க. மிடில் கிளாஸ் பத்தி எப்படி நீங்கள் பேசலாம். கடவுளுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கு என்று சொன்னார்கள். அதுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க. நம்ம ரெண்டு பேரும் இருக்கலாம் என்று சொல்றீங்களா? நான் பணம் கேட்டேன் என்றெல்லாம் என்று சொன்னார்கள். நான் வாயை திறக்கவில்லை. என்னுடைய கணவர் என்னுடன் இருக்க வேண்டும். எனக்கும் என்னுடைய கணவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை சொல்வதற்கு இவர்கள் யார்? எனக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை சொல்வதெல்லாம் பொய். நான் அவருடன் சண்டை போட்டு பிரிந்து விட்டேன். அதற்காக அவரை நான் விட்டு கொடுக்க முடியாது என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement