சிம்பள் கேள்வி, வீட்ல பால் இருக்கா இல்லையா ? வனிதாவை பங்கம் செய்யும் பிரபலம்.

0
2017
vanitha

கடந்த இரு தினங்களாக வனிதா மற்றும் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக வெளியான செய்தி தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனிதா பீட்டர் பாலை பிரிந்துவிட்டதாக முதன் முதலில் பதிவை போட்டது ரவீந்திரன் தான். ஆமாம் சரிபார்க்கப்பட்டு விட்டது அனைவரின் வார்த்தைகளும் உண்மையாகிவிட்டது வீட்டில் இருந்து துரத்தப்பட்டார் பிபி என்றுபதிவிட்டு இருந்தார். இதற்கு ஏற்றார்போல கடந்த இரண்டு மூன்று தினங்களாக வனிதாவின் சமூக வலைதள பக்கங்களில் எந்த ஒரு பதிவும் போடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பீட்டர் பவுல் குடித்துவிட்டு பிரச்சனை செய்ததால் தான் அவரை நடு ரோட்டில் இறக்கி விட்டதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா இதுகுறித்து நீண்ட பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், பல ஆண்டுகளாக குடும்பம் மற்றும் வீடு இல்லாத நபரை வைத்து உருவாக்கினேன்.எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று நினைத்தோம்.அவர் மீது அக்கறை காட்டுவது தான் வேலையாக இருந்தது. அவரை பிரியும் வலியை என்னால் ஏற்க முடியவில்லை. இன்றும் அதே வலியுடன் தான் இருக்கிறேன்.உங்கள் அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது தற்போது நான் மிகப்பெரிய ஒரு சவாலை எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.

- Advertisement -

அன்பு ஒன்றுதான் நான் விரும்புவது, ஆனால் அது என்னிடமிருந்து சென்றுவிடும் என்று பயப்படுகிறேன். இந்த சவாலை என்னுடைய வேலை மற்றும் குழந்தைகளை பாதிக்காமல் இருக்கும் வண்ணம் நான் எதிர் கொள்வேன். என்னுடைய வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து கொண்டு இருக்கிறது. இது ஒன்றும் எனக்கு புதிதானது இல்லை. காதலில் தோற்பது என்பது எனக்கு பழக்கமாகிவிட்டது. ஆனால், அதையெல்லாம் கடந்து நான் மேலும் நலமாக இருக்கிறேன்.காதலை நம்பி அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள் தரக்கூடிய வலி மிகவும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு வலி. உங்கள் கண்முன்னாலேயே உங்கள் வாழ்க்கையை தொலைப்பது என்பது மிகவும் வலி தரக்கூடியது என்று குறிப்பிட்டு இருந்தார்.

வனிதா இந்த பதிவின் மூலம் குழம்பியுள்ள ரசிகர்கள் பீட்டர் பவுலை பிரிந்துவிட்டாரா அல்லது விரைவில் அவரை பிரிய போவதற்கான முடிவை எடுக்கப் போகிறாரா என்ற ஒரு சந்தேகத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் கண்டிப்பாக வனிதா மற்றும் பீட்டர் பவுல் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்பது வனிதாவின் இந்த நீண்ட பதிவின் மூலம் தெளிவாக தெரிகிறது. இப்படி ஒரு நிலையில் ரவீந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் எவ்ளோ பெரிய விளக்கம் சிம்பிள் கேள்வி வீட்டுல பால் இல்லைன்னு நான் சொல்றேன் இருக்கா இல்லையா என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement