வெறும் வீம்புக்கு மட்டும் வனிதா விஷயத்தில் வரல .பீட்டர் மகனின் கல்வி செலவையும் ஏற்ற பிரபலம்

0
3960
vanitha

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா தற்போது ஏற்கனவே திருமணமான பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பீட்டர் பவுல் தனது முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதா திருமணம் செய்து கொண்டதால் இந்த திருமணமும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பீட்டர் பவுல் மீது ஏற்கனவே பீட்டர் பவுலின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த பிரச்சினை ஒரு புறம் சென்று கொண்டிருக்க, வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமண பிரச்சனையில் பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து விஷயத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இவர்களை தொடர்ந்து சூர்யா தேவி., லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி என்று பலரும் இந்த பிரச்சனையில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

- Advertisement -

அதிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா லைவ் பேட்டியில் தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்த பின்னர் இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.இதையடுத்து வனிதா ட்விட்டரில் இருந்தும் விலகினார். வனிதா பீட்டர் பவுல் திருமண சர்ச்சையில் ஆரம்பம் முதலே ஆதரவாக இருந்து வருவகிறார் . இவர் எலிசபத் குடும்பத்தாரிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

Ravindar Chandrasekaran ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಜುಲೈ 22, 2020

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டரின் மகன் ஜான் தனது கல்லூரி கட்டணத்தை இன்னும் கட்டவில்லை என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் பீட்டரின் மகனின் கல்வி கட்டணத்தை தயாரிப்பாளர் ரவீந்திரன் செலுத்தியிருக்கிறார். மேலும், அந்த குடும்பத்தை நானே காப்பாற்றுவேன் என்று அவர்களை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைமைக்கு ஆளாக்குவதெல்லாம் எனக்கு பெரிய விஷயம் கிடையாது என்றும் கூறியிருக்கிறார் ரவீந்திரன்.

-விளம்பரம்-
Advertisement