நீண்ட வருடங்களுக்கு பின்னர் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா. என்ன இப்படி மாறிட்டாரு.

0
149590
Vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட நடிகை வனிதா. விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் வனிதா. அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் இவருக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து விலகி விட்டார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள்தான் வனிதா என்பது பலரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

இவர் முதலில் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் வேறு யாருமில்லை சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பாரா அவர் தான். நடிகர் ஆகாஷ் தமிழில் சொக்கத்தங்கம், தாமிரபரணி என்று ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.

இதையும் பாருங்க : நடிகை நக்மா ஜோதிகாவின் சொந்த அக்காவே கிடையாது. இவர் தான் சொந்த அக்கா.

- Advertisement -

அதே போல வனிதாவின் பெற்றோர்களும் ஆகாஷ் பக்கமே நின்றனர். ஆனால், நீதிமன்றத்திலோ மனிதன் தான் வளரவேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். இருப்பினும் ஆகாஷ் மற்றும் விஜயகுமாருக்கு வனிதாவிடம் மகன் வளர்வதை விரும்பவில்லை. இதனால் வனிதாவிற்கும் அவரது பெற்றோர்களுக்கும் கூட மிகப் பெரிய சண்டை வெடித்தது. அதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராஜன் ஆனந்தன் திருமணம் செய்து கொண்ட பின்னர் இந்த தம்பதியருக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறந்தார். ராஜன் ஆனந்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த அனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்னர் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான வீட்டில் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

This image has an empty alt attribute; its file name is vanitha-aakash.jpg
வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ்

-விளம்பரம்-

என்னதான் மகளுடன் வசித்து வந்தாலும் தனது மகன் ஸ்ரீஹரி தன்னுடன் இல்லை என்று வனிதா பல முறை ஏங்கி இருக்கிறார். இந்த நிலையில் வனிதா தனது மகன் ஸ்ரீஹரியின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய தளபதி சூப்பர் ஸ்டார் தல உலகநாயகன் என்னுடைய வாழ்க்கை என்னுடைய விஜய் ஸ்ரீஹரி என்னுடைய அப்பாவை போலவே இருக்கிறார் அல்லவா என்று பதிவிட்டுள்ளார் வனிதா. இந்த புகைப்படத்தை கண்ட பலரும் விரைவில் நீங்கள் உங்கள் மகனுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement