நடிகை நக்மா ஜோதிகாவின் சொந்த அக்காவே கிடையாது. இவர் தான் சொந்த அக்கா.

0
185536
Jyothika Nagma
- Advertisement -

நடிகை நக்மா அவர்கள் 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம், போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி என பல மொழி திரைப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மேலும், நடிகை ஜோதிகாவை பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா?? அந்த அளவிற்கு அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை. இவருடைய இயற்பெயர் ஜோதிகா சாதனா. நடிகை ஜோதிகா அவர்கள் சந்தர் சாதனா என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகள் ஆவார்.

-விளம்பரம்-
Image result for nagma jyothika

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். நடிகை ஜோதிகா அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். மேலும், இவர் குஷி, பேரழகன், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல், சந்திரமுகி போன்ற திரைப் படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் இவர் இந்த படத்துக்காக பல விருதுகளை வாங்கி உள்ளார். நடிகை ஜோதிகா அவர்கள் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

இதையும் பாருங்க : இரண்டாம் குழந்தைக்கு தாயான அறந்தாங்கி நிஷாவின் வளைகாப்பு. வீடியோ இதோ.

- Advertisement -

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா அவர்கள் குடும்பத்தில் கவனம் செலுத்துவதையே நோக்கமாகக் கொண்தார். பின் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மலையாள திரைப்படம் ஆன “ஹொவ் ஓல்டு ஆர் யூ” என்ற திரைப் படத்தை தமிழில் ரீமேக் செய்து உள்ளார்கள். அந்த படத்தின் மூலம் தான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு என்றி கொடுத்தார். அதனை தொடர்ந்து நடிகை ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். 36 வயதினிலே, காற்றின் மொழி, ஜாக்பாட், மகளிர் மட்டும், ராட்சசி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

Image result for jyothika mother

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை ஜோதிகா உடைய அக்கா நக்மா என்று தான் அனைவருக்கும் தெரியும். உண்மையிலேயே நடிகை நக்மா ஜோதிகா உடன் பிறந்தவர் கிடையாது. ரோசினி அவர்கள் தான் நடிகை ஜோதிகாவுடன் ஒன்றாக பிறந்தவர். நடிகை நக்மா அவர்கள் சந்தர் சாதனாவின் (ஜோதிகாவின் தந்தை)முதல் மனைவியின் மகள் ஆவார். இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர்கள் தான் ரோஷினியும், ஜோதிகாவும்.

ரோஷினி – ஜோதிகா – நக்மா

தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது உள்ளது என்று சொல்லலாம். இருப்பினும் ஜோதிகா மற்றும் நக்மாவும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் எப்போதும் இருந்து வருகிறார்கள். ஜோதிகா குடும்பத்தில் நடந்த அணைத்து நிகழ்வுகளிலும் நடிகை நக்மா பங்கேற்று தான் வருகிறார். நடிகை ஜோதிகா அவர்கள் தற்போது தம்பி என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் கார்த்திக் தன் அண்ணியுடன் (ஜோதிகா) இணைந்து நடித்து உள்ளார்.

Advertisement