குக்கூ வித் கோமாளியில் தன்னுடன் இருந்தவருக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ள வனிதா.

0
33032
vanithabala
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்றார் பாலா. இந்த நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு வாரமும் பாலா செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. அதுவும் ரம்யா பாண்டியனை வைத்து பாலாவும், புகழும் பண்ண காமெடிகளால் தான் இந்த சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமானது என்று சொல்லலாம். மேலும், இந்த நிகழ்ச்சியில் பாலா அதிகம் வனிதாவுடன் சேர்ந்து தான் சமையல் செய்வார்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பாலா அவர்கள் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து நடிகை வனிதா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள். நடிகை தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். பின் சினிமாவில் இருந்து நீண்ட காலம் பிரேக் எடுத்துக் கொண்டார்.

இதையும் பாருங்க : விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா.

-விளம்பரம்-

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் வனிதா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சில தினங்களுக்கு முன் தான் வெற்றிகரகமாக முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றியாளராக வனிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது வனிதா படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் வனிதா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலா நடிக்கும் படம் குறித்து கூறியது,

Image result for cooku with comali

இப்போ நான் ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். பஞ்சாயத்து பரமேஸ்வரி போல் கதாபாத்திரம் என்று சொல்லலாம். இந்த படத்துல புல்லட் ஓட்டும் மாதிரி ஒரு காட்சி இருக்கும். எனக்கு வண்டியே ஓட்ட தெரியாது. அதனால இப்போ தான் கத்திட்டு இருக்கேன். இந்த படம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய கதாபாத்திரமும் அவர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய இயக்குனர் ரொம்ப நேர்மையானவர். அவர் கிட்ட நான் பர்சனலாக ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டேன். அது என்னனா, நிறைய திறமை இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். பிறகு ‘வெள்ள காக்கா மஞ்ச குருவி’ என்ற படத்தில் தம்பி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பாலா வேணும் என்று நான் இயக்குனரிடம் கேட்டேன். பின்னர் அவரும் ஒத்துக் கொண்டார். பாலாவை இந்த படத்தில் நடிக்க வெச்சிருக்கேன். இனிமேல் பாலாவை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என்று கூறினார்.

Advertisement