சூப்பர் ஸ்டாரின் வீட்டில் இன்று இப்படி ஒரு விசேஷமா. குவியும் வாழ்த்துக்கள்.

0
32928
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். சாதாரண பேருந்து ஓட்டுநராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று சினிமாவில் உலகம் முழுவதும் புகழும் அளவிற்கு உச்சத்தை அடைந்திருக்கிறார். இந்த ஆண்டு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவந்த படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “அண்ணாத்த”. இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறுகிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சித்தார்த்,சூரி, ஜார்ஜ் மரியான் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : இயக்குனர் விஜய்யால் நான் பல இழப்புகளையும், துரோகங்களையும் அனுபவித்துக் கொண்டேன்- புலம்பிய பிரபலம்.

அதோடு சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரப்போகிறார் என்று சொன்னவுடன் சோசியல் மீடியாவில் பல கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு தற்போது மக்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய குடும்பத்தினர் உடன் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அது என்னவென்றால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று திருமண நாள். நடிகர் ரஜினிகாந்த்– லதா அவர்களுக்கு திருமணம் ஆகி இன்றோடு 39 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளது. அதனால் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய திருமண நாளை தன்னுடைய குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். இவர்களுடைய திருமணத்தினத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் ரஜினிகாந்தின் திருமண நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement