டி-டோட்லர், நான் வெஜ் சாப்பிட மாட்டார்னு சொன்னிங்க. இது என்ன ? – வனிதாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
194115
vanitha
- Advertisement -

பிக் பாஸ் வனிதாவின் மூன்றாவது திருமணம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி அவரது வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. மேலும், பீட்டர் பவுல் தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்திருந்தார் அவரது மனைவி.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக வனிதாவின் குடும்ப பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான், மேலும், வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டுமே விவாகரத்தில் முடிந்துவிட்டது. மேலும் இவருக்கு இரண்டுபெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். ஆனால், இவரது மகன் மட்டும் இவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று பீட்டருடன் திருமணம் நடந்தது.

- Advertisement -

வனிதா, பீட்டரை திருமணம் செய்ததை அடுத்து பீட்டரின் மனைவியான எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது கணவருக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருகிறது என்றும் அவர் ஒரு பொம்பள பொறுக்கி, குடிகாரர் என்றெல்லாம் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த வனிதா,

பீட்டர் ஒரு டி-டோட்லர் என்றும் அவர் நான் வெஜ் கூட சாப்பிட மாட்டார் என்றும் கூறியிருந்தார். மேலும், தனது திருமணத்தில் கூட நான் தான் ஷாம்பெய்ன் குடித்தேன். ஆனால், அவர் நான் ஆல்கஹாலிக் வைன் தான் குடித்தார் என்று அதற்க்கு தனியாக வீடியோ ஆதாரத்தை கூட வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் வனிதா, பீட்டருடன் தனது யூடுயூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியீட்டியுள்ளார்.

-விளம்பரம்-

அதில், தான் செய்த சிக்கனை பீட்டருக்கு ஊட்டி விடுகிறார் வனிதா. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ‘பீட்டர் நான் வெஜ் சாப்பிட மாட்டார்னு சொன்னீங்க, இப்போ இது என்ன’ என்று விளாசி தள்ளி வருகின்றனர். ஆனால், இதற்க்கு ஏற்கனவே அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள வனிதா, தான் செய்த சிக்கனை பீட்டருக்கு ஊட்டி விடுகிறார் வனிதா. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ‘பீட்டர் நான் வெஜ் சாப்பிட மாட்டார்னு சொன்னீங்க, இப்போ இது என்ன’ என்று விளாசி தள்ளி வருகின்றனர். ஆனால், இதற்க்கு ஏற்கனவே அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள வனிதா, உங்களின் ஆர்வத்திற்குகாக நான் செல்கிறேன். என்னுடைய தலைப்பிலும் அவருக்கு நான் முதன்முதலாக சிக்கனை ஓட்டுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறேன். நான்தான் அவரை நான்வெஜ் சாப்பிட சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் என்னால் தினமும் வெஜிடேரியன் சமைக்க முடியாது. மேலும் அவருக்கு கொஞ்சம் உடல் எடை கூட வேண்டும்.

Advertisement