நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா பல ஆண்டுகளுக்கு பின்னர் கதாநாயகியாக களமிறங்க இருக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள்.
அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் பிரிந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா, வட இந்தியர் ஒருவருடன் தனது நான்காம் திருமணத்தை முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது. மேலும், அவர் ஒரு பைலட் என்றும் 3மாதத்திற்கு ஒரு முறை தான் வனிதாவை வந்து சந்தித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.
மேலும், வனிதாவின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் கூட இதனை உறுதி செய்ததாக செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், அதனை மறுத்தார் வனிதா. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரும் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. இப்படி ஒரு நிலையில் இவர் பிக்கப் டிராப் படத்தில் நடிக்கிறார். அதற்கான புகைப்படம் தான் இது தெரியவந்தது.
இப்படி ஒரு நிலையில் பிக்கப் டிராப் படத்தின் பிரெஸ் மீட்டில் பங்கேற்ற வனிதாவிடம், நான்காம் திருமணம் குறித்து கேட்கப்பட்டதற்கு நான் 4 இல்ல 40 கூட கல்யாணம் பண்ணுவேன். நான் சாமியாராக போவது இல்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று வனிதா தனது 42 வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார்.
அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் வாசி ஒருவர், வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணத்தின் போது எடுத்த லிப் லாக் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த வனிதா, நான் எப்போதும் நேசிக்கப்படும் அவள் என்பதை நினைவு படுத்தியதற்கு நன்றி காதல் என்பது ஒரு அழகான விஷயம் ஆனால் நீங்கள் அன்பை கொடுக்கும் நபர் அதற்கு தகுதியானவர் இல்லை என்றாலும் அதற்கான சரியான சந்தர்ப்பம் அமையவில்லை என்றாலும் அதிலிருந்து வெளியில் வருவதை தான் நான் செய்வேன் உங்களைப் போன்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இது புரியாது என்று கூறியுள்ளார்.