முழு மனதாக அந்த டாட்டூவை நான் அழிக்கல – முன்னாள் காதலி வனிதாவை மீண்டும் சந்தித்த ராபர்ட் மாஸ்டர்.

0
526
Vanitha
- Advertisement -

வனிதாவுடன் இருந்த பழைய நினைவுகளை ராபர்ட் மாஸ்டர் பகிர்ந்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார்.

-விளம்பரம்-

பின் சினிமாவில் இருந்து இவர் சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். பின் கடந்த ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்திருந்தது. ஆனால், திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே வனிதாவிற்கும், பீட்டர் பாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். தற்போது வனிதா படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

யூடியூப் சேனல்:

மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் பீட்டர் பவுல் திடீர் மரணமடைந்தார். பீட்டர் பவுலின் இறப்பிற்கு பின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இரங்கல் தெரிவித்து வனிதா பதிவு ஒன்றை கூட போட்டு இருந்தார். இந்த நிலையில் வனிதா- ராபர்ட் மாஸ்டர் இணைந்து பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

வனிதா-ராபர்ட் மாஸ்டர்:

அதாவது, வனிதா அவர்கள் ராபர்ட் மாஸ்டருடன் சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார். இருவரும் தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் வைரல் ஆகி இருந்தது. பின் சில ஆண்டுகளில் பிரிந்து விட்டார்கள். பிரிந்தாலும் இருவரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். ராபர்ட் மாஸ்டர் கூட வனிதாவின் பெயரை கையில் பச்சை குத்தி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கேம்பிங் வித் வனிதா என்ற நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் உடன் வனிதா பங்கேற்று இருந்தார். இதில் இவர்கள் இருவரும் எப்படி எல்லாம் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்பதை கிண்டலம் கேலியும் ஆக பேசியிருக்கிறார்கள். அப்போது ராபர்ட் மாஸ்டர், எந்த நினைவுகளையும் என்னால் மறக்க முடியவில்லை. ஒருவர் மீது உண்மையான அன்பும் பாசம் வைத்து விடுவேன். அவர்கள் ஏமாற்றினால் கூட எனக்கு தெரியாது.

நான் முழுமனதமாக செய்யவில்லை :

இந்த மாதிரியான விஷயங்களில் தான் ஏமாந்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் இரண்டு முறை திருமணம் நடந்தது. ஆனால், காதல் பெரும் பிரச்சனையாக இருந்தது. அது மறக்க முடியாத ஞாபகங்களை தான் கொடுத்திருக்கிறது. நான் என்னுடைய கையில் வனிதா என்று டாட்டு போட்டு இருந்தேன். ஆனால், வாழ்க்கையில் வரும் வேறு ஒரு பெண்ணை அதைப்பற்றி கேட்டால் என்ன செய்வது என்று அதை அழித்துவிட்டேன். அதை நான் முழுமனதமாக செய்யவில்லை. அதைப் பற்றிய ஞாபகங்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறது என்று கூற உடனே வனிதா நாம் இருவரும் மெச்சூரிட்டாக இருப்பதால்தான் நம்மால் இது போன்ற விஷயங்களை அமர்ந்து பொறுமையாக பேச முடிகிறது என்று இருவரும் கலகலப்பாக பேசியிருக்கிறார்கள்.

Advertisement