உன் மகள காமிக்க போகும் போது உன் கணவர் முன்னாடியே பீட்டர் கூட கொஞ்சிகிட்டயாமே – சூர்யா தேவி வெளியிட்ட ஆதாரம்.

0
2546
vanitha
- Advertisement -

நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா மற்றும் பீட்டர் பவுலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின. இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் ‘பீட்டர் பவுலுக்கு விவாகரத்து ஆனது பற்றி எனக்கு ஆரம்பத்தில் தெரியாது அப்படி தெரிந்திருந்தால் நானே செருப்பால் அடித்து விரட்டி இருப்பேன். அவர் மீது நம்பிக்கை இருந்ததால் அதைப் பற்றியெல்லாம் நான் விசாரிக்கவில்லை அவரது மனைவி போலீசிடம் புகார் அளித்த பின்னர்தான் அவர் விவாகரத்து பெறவில்லை என்பதே எனக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதேபோல பிரிவிற்கான காரணத்தை கூறியுள்ள வனிதா அவருக்கு ஏற்கனவே குடி பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால், நான் அவரை சந்தித்த பின்னர் அதையெல்லாம் விட்டுவிட்டார் இருப்பினும் அவ்வப்போது குடித்துக் கொண்டும் புகை பிடித்து கொண்டும் இருந்தார். இதனால்தான் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம் .அவருக்காக நான் சேர்த்து வைத்திருந்த அனைத்து பணத்தையும் செலவு செய்தேன் அவருக்காக நான் ஒரு பத்து பதினைந்து லட்சம் ரூபாய் சிகிச்சைக்காக அளித்து இருக்கிறேன். ஆனால் பணத்தை பற்றி ஒன்றும் பிரச்சினை கிடையாது.

- Advertisement -

ஆனால், அப்போதும் அவர் திருந்தவில்லை. இதனால் அவரை பிரிந்துவிட்டதாக கூறி இருந்தார். வனிதாவின் இந்த வீடியோவை பார்த்து பலரும் கொஞ்சம் சோகத்தில் ஆனாலும் ஒரு சிலர் வனிதாவின் இந்த நிலை குறித்து சந்தோஷமாக இருந்து வருகிறார்கள். அதில் சூர்யா தேவையும் ஒருவராக இருக்கக்கூடும். வனிதாவின் மூன்றாம் திருமண விஷயத்தில் சூர்யா போட்ட வீடியோக்கள் பற்றி அனைவரும் அறிவார்கள். இப்படி ஒரு நிலையில் வனிதா பீட்டர் பவுல் பிரிந்த பின்னர் சூர்யா தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போதும் வனிதாவை நம்ப முடியாது என்றும் ஒருவேளை பீட்டர் பவுல் இறந்து விட்டால் அதற்கு தான் காரணம் என்று பலர் நினைத்து விடுவார்கள் என்பதற்காக தான் பயத்தில் வனிதா அழுதார் என்றும் கூறியிருக்கிறார்.

அதே போல அந்த வீடியோவில் தனது முன்னாள் கணவர் இரண்டு பேரும் தன்னிடம் பேசி வருகிறார் என்று கூறி இருந்தார் வனிதா. இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவி தனது யூடுயூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வனிதாவின் இரண்டாவது கணவர் தன்னிடம் பேசி வருவதாகவும், அவரை பீட்டர் பாலுடன் சந்தித்து அவரது மகளை வனிதா காட்டியதாகவும் கூறி இருந்தார். அதே போல வனிதாவின் இரண்டாம் கணவர் தனது மகளை சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது யூடுயூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சூர்யா தேவி.

-விளம்பரம்-
Advertisement