பிக்பாஸ் நிகழ்ச்சி 66 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய பொம்மலாட்ட மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், இந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க பிக்பாஸ் ப்ரோமோ வில் அடிக்கடி கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் தான் போட்டு காண்பித்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும்சலிப்பாக தான் போய்க் கொண்டு இருக்கிறது. அது போக இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை என்பதால் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இருக்கும் சுவாரசியமும் இந்த வாரம் இடம் பெறாது.
கடந்த இரண்டு நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் கிராமிய கலைஞராக மாறி டாஸ்குகளை செய்து வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விட செய்த ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.மேலும், இன்று தலைவர் பதவிக்கான போட்டியும் நடைபெற இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க கவின் தாயார் சீட்டு கம்பெனி நடத்தி பல லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். தனது தாய் கைது செய்ததை அறிந்த கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று நள்ளிரவு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.