இன்று தளபதி விஜய்யின் 46வது பிறந்தநாள். இதை கொண்டாடும் விதமாக விஜய்க்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய்யின் பிறந்தநாளையொட்டி மாஸ்டர் படக்குழு சார்பில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் விஜய்யின் சந்திரலேகா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான வனிதா விஜயகுமார் தன் முதல் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் சந்திரலேகா படம் ஸ்டில்ஸை தன் ட்விட்டர் பக்கத்தில் ப்ரொஃபைல் பிக்சராகவும் வைத்துள்ளார்.
மேலும், வனிதா அவர்கள் சந்திரலேகா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பது, 25 ஆண்டுகளுக்கு முன்பு நாம் அரும்பும் தளிரே பாடல் ஷூட்டிங்கிற்காக குலு மணாலிக்கு சென்றோம். அங்கு தான் உங்களின் 21வது பிறந்நதாளை கொண்டாடினோம். அது எல்லாம் அப்படியே எனக்கு நினைவிருக்கிறது. நமக்கு வயதாகியிருக்கலாம் ஆனால், அந்த தருணங்கள் எப்பொழுதும் அப்படியே இருக்கும்.
எப்பொழுதுமே நீங்கள் என் சூப்பர் ஸ்டார் #HappyBirthdayThalapathy என்று தெரிவித்துள்ளார். வனிதா சினிமாவில் இருந்து விலகி 19 வயதில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். பிறகு வனிதா, ஆகாஷ் இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு வனிதா ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ராஜனும், வனிதாவும் பிரிந்துவிட்டனர். தனியாளாக இருந்து தன்னுடைய இரண்டு மகள்களை வளர்த்து வரும் வனிதா மீண்டும் திருமணம் செய்யவிருக்கிறார்.
சினிமா துறையை சேர்ந்த பீட்டர் பால் என்பவருக்கும், வனிதாவுக்கும் வரும் 27ம் தேதி மாலை வீட்டில் வைத்து திருமணம் நடக்கவிருக்கிறது. மேலும், வனிதா தன் பெற்றோரின் திருமண நாள் அன்று திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதில் அவரின் மகள்களுக்கு தான் சந்தோஷம். இது தான் உங்கள் வாழ்வில் நடக்கும் நல்ல விஷயம் என்று மகள் கூறியதை கேட்டு தனக்கு கண்ணீர் வந்துவிட்டதாக வனிதா விஜயகுமார் தெரிவித்தார். இதை பார்த்து பலரும் வனிதாவுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.