தந்தையின் உடலை நாடு கொண்டு வர போராடும் லாஸ்லியா – வனிதா அளித்த உருக்கமான பேட்டி.

0
1077
losliya
- Advertisement -

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் முகேன், தர்ஷன், லாஸ்லியா என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதில் மிகவும் பிரபலமடைந்தது என்னவோ லாஸ்லியா தான். இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட 24 மணி நேரத்திலேயே இவருக்கென்று பல ஆர்மி கூட துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் மற்றும் லாஸ்லியாவின் காதல் தான் மிகவும் லைட் ஆக இருந்து வந்தது.

-விளம்பரம்-

கவின் லாஸ்லியா இருவரும் பிக் பாஸ் வீட்டில் காதலிதது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இருவருமே தங்கள் காதலை வெளிபடையாக கூறவில்லை எது வேண்டுமானாலும் வெளியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று கவின் அடிக்கடி கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்தது . கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள்சென்று இருந்தார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு கனடா நாட்டில் இவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இதனால் லாஸ்லியவிற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை வனிதா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நான் லாஸ்யாவிடம் பேசி இருந்தேன். அவள் மிகவும் மன வருத்தத்துடன் அழுது கொண்டு இருக்கிறாள். இருப்பினும் அவர் இலங்கைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அவருடன் உறுதுணையாக விஜய் தொலைக்காட்சி கூடுவோம் இருக்கிறது பிரச்சனை காரணமாக அவரது உடல் உடனடியாக இலங்கை வந்து சேராது என்னுடைய அன்பும் பிரார்த்தனையும் அவளுக்காக கொடுக்கிறேன் என்று உருக்கமுடன் பதிவிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வனிதா பேசுகையில், அவரது உடல் இன்னும் இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை. எம்பேசியில் அவள் தனி ஆளாக பேசிக்கொண்டு வருகிறாள். நானும் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று சொன்னேன். இந்த கொரோனா பிரச்சனை காரணமாக யாராவது வெளிநாட்டில் இறந்தால் அவர்களது உடலை இந்தியா கொண்டு வருவது எள்வளவு கஷ்டம் என்பது தெரியும். அதே போல இங்கிருந்து அங்கே சென்றால் கூட யாராவது ஒருத்தர் மட்டும் தான் செல்ல வேண்டும் அப்படி பார்த்தல் யார் செல்வாங்க. லாஸ்லியா அம்மாவிற்கு ஒன்றுமே தெரியாது. இவள் தான் இப்போ அனைத்தையும் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், லாஸ்லியா தந்தையின் உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதா ? இல்லை அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement