அவள், ஒரு கஞ்சா வியாபாரி – ஆடியோ ஆதாரத்தை வெளியிட்ட வனிதாவின் வழக்கறிஞ்சர்.

0
8100
vanitha
- Advertisement -

பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.ரசிகர்களை தாண்டி வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதேபோல தேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

இந்த ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வனிதா தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், கஸ்தூரி, சூர்யா தேவி போன்றவர்களை குப்பை என்றும் நாய்கள் என்றும் தன்னை பற்றி பேசினால் செருப்பால் அடிப்பேன் என்றும் கண்டமேனிக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார் வனிதா. மேலும், என்னைப் பற்றி பேசியவர்கள் அனைவர் மீதும் நான் புகார் கொடுத்திருக்கிறேன் அவர்கள் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : அவ கஞ்சா வியாபாரி, ரெண்டு முற டைவர்ஸ் பண்ணவ – போலீசில் புகார் அளித்த வனிதா பரபரப்பு பேட்டி.

- Advertisement -

இந்த நிலையில் வனிதா சொன்னது போலவே, ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார். மேலும், சூர்யா தேவி குறித்து பேசிய வனிதா, அவள் ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார் வனிதா. மேலும், அவர் மீது இன்னும் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் வனிதா.

மேலும், வனிதாவின் வழக்கறிஞர் பேசுகையில், அவள் ஒரு கஞ்சா வியாபாரி. அவள் வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா இருக்கிறது. அவள் செய்யும் தப்பை மறைக்க தான் தற்போது இது போன்று எல்லாம் பேசி வருகிறாள். காவல்துறையே அவள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது. அவரை கைது செய்யப் போனால் தங்களைப் பற்றியும் இப்படித்தான் பேசுவார் என்று போலீசாரே பயப்படுகின்றனர். மேலும், அவள் கஞ்சா வியாபாரி தான் என்பதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறி இருந்த வனிதாவின் வழக்கறிஞர் தற்போது அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement