தன் மகனின் 21 பிறந்தநாளில் அவரின் புகைப்படங்களை பதிவிட்ட வனிதா – ப்பா, என்னய்ய இது ஆளே மாறி வேற மாதிரி இருக்காரு.

0
630
vanitha
- Advertisement -

சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is vaniotha.jpg

அதற்கு பிறகு இவரைக் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆனால், இவருக்கும் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பின்னர் இவர் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார்.

- Advertisement -

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கலக்கும் வனிதா :

அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவைடந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஆனால், அந்த நிகழ்ச்சியிலும் பிரச்சனை செய்துவிட்டு பாதியில் வெளியேறினார் வனிதா. ஆனாலும், இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை :

சமீபத்தில் இவர் தமிழ் திரைப்படம் ஒன்றுக்காக ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். அதே போல பிரசாந்தின் அந்தாகன் படத்திலும் நடித்துள்ளார். ஆனால், இன்னமும் இவர் நடித்த ஒருபடம் கூட வெளியாகவில்லை. வனிதா சினிமா உலகிலும், சோசியல் மீடியாவிலும் பிசியாக இருந்தாலும் இவருடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியைத்தான் சந்தித்து இருக்கிறார். வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார்.

-விளம்பரம்-

கைகொடுக்காத குடும்ப வாழ்க்கை :

இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்து விட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வந்தார். பின் வனிதா கடந்த ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் விட்டு பிரிந்து வந்தார். இப்படி வனிதா மூன்று முறை திருமணம் செய்தும் தோல்வியில் தான் முடிந்து உள்ளது.

வனிதாவின் மகன் :

வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேறு யாருமில்லை சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பவர். மேலும், வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண மகளும் கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.

மகன் பிறந்தநாளில் வனிதா உருக்கம் :

இதையடுத்து மகள்கள் அம்மாவுடனும், மகன் தந்தையுடனும் வளர வேண்டும் என்று உத்தரவிடபட்டது. அதன் பின் ஸ்ரீஹரி தன் தாத்தா விஜயகுமார் உடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி இன்று தனது 21 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள வனிதா ‘என்னுடைய முதல் காதல் என்றும் நீதான். அன்பு எப்போதும் அளவற்று இருக்க வேண்டும், தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்புதான் தூய்மையானது. ஒரு அம்மாவாக இது என் 21வது பிறந்தநாள். என் முதல் மகன் ஸ்ரீஹரி பிறந்து 21 வயதை கடந்துள்ளான். என்னுடைய அழகான திறைமையான மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் நீ என் லட்டு தான். உன் கனவுகள் அழைத்தும் நிறைவேற கடவுள் உன்னை ஆசீர்திக்கட்டும்’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement