விஜய்யை அவர், இவர்ன்னு கூப்பிட முடியாது- வனிதாவின் அதிரடி பேட்டி. ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?

0
278
vanitha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார். அதற்கு பின் பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. அதோடு இவரை பலரும் வத்திக்குச்சி வனிதா என்று தான் அலைகிறார்கள்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து டைட்டில் வின்னர் ஆனார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். தற்போது மாஸ்டர் தவ சிவராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் காத்து படத்தில் நடிகை வனிதா செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

வனிதா நடிக்கும் படங்கள்:

இந்த பாடலை கானா பாலா எழுதியுள்ளார். மேலும், இந்த பாடலின் மேக்கிங் வீடியோ யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த பாடல் மட்டுமின்றி தில்லிருந்தா போராடு, அந்தகன் என பல படங்களில் வரிசையாக கமிட்டாகி வனிதா நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, விஜய் உடன் நடித்து சில படங்களில் நடித்த வனிதா இருபது ஆண்டுகள் கழித்தும் மீண்டும் தமிழ் சினிமா உலகில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கப்பட்ட போது அதில் அவர் கூறி இருப்பது,

வனிதா அளித்து உள்ள பேட்டி:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த உடன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறேன். நான் நடித்த படங்கள் எல்லாம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. நான் நடிகர் விஜயுடன் தான் முதல் படம் பண்ணினேன். அன்னைக்கு நான் நடிகர் விஜய்யை அணுகியமுறைக்கும் இன்னிக்கு அவர் இருக்கும் உயரத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது எனக்கு வியப்பா இருக்கு. அன்னைக்கு நான் எப்படி அவரிடம் பேசி பழகினேனோ, அப்படியே இன்றைக்கும் என்னால் பேசமுடியும். இன்னைக்கு திடீர்னு அவர் இவர் என்று மாற்றிப் பேச முடியாது.

-விளம்பரம்-

விஜய் குறித்து வனிதா சொன்னது:

இன்னைக்கு நான் பேசுவதை கேட்டு உங்களுக்கு நான் ஏதும் மரியாதைக் குறைவாக பேசுவது போல தெரியும். ஆனால், நான் ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் அவரிடம் பேசி பழகி இருக்கிறேன். விஜய் ரசிகர்கள் எனக்கும் ரசிகர்கல தான். ஆரம்பகால தளபதியின் கதாநாயகி அந்தஸ்து எனக்கு இருக்கு. அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். அதே போல் வெள்ளித்திரையில் இருந்தாலும் சின்னத்திரை வாய்ப்புகளை தவற விடப் போவதில்லை. ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக தான் நான் மக்களுக்கு பரிச்சயமானேன்.

Bigg Boss Vanitha Shares ThrowBack Picture Of Vijay Chandralekha

வனிதா நடிப்பில் உருவாகி வரும் படங்கள்:

அதனால் என்னை மக்கள் வரவேற்கிறார்கள். சின்னத்திரை தான் மக்களோடு நீண்ட தொடர்பை ஏற்படுத்தும் கருவி. வசந்தபாலன் தயாரித்து இயக்கியிருக்கும் அநீதி, மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவகி வரும் மலையாள படத்தின் ரீமேக் படம் வாசுவின் கர்ப்பிணிகள். இதுதவிர கருணாகரன் உடன் இணைந்து அனல் காற்று, அந்தகன் என்று பல படங்கள் இருக்கிறது. இதோடு ரியாலிட்டி ஷோ, பொட்டிக் ஷாப் பிசினஸ், யூடியூப் சேனல் என்று நிற்க இயலாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன் என்று வனிதா கூறியிருந்தார்.

Advertisement