அசீம் ஜெயிக்கமாட்டான்னு தெரிந்ததும் இந்த பக்கம் திரும்பிட்டீங்களா – கடைசி நேரத்தில் பல்டி அடித்த வனிதாவை கேலி செய்யும் ரசிகர்கள்.

0
518
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

நேற்றுய நிகழ்ச்சியில் அமுதவாணன் 11,75,000 பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை தொடர்ந்து அசீம், விக்ரமன், மைனா, சிவின் ஆகிய நான்கு பேர் மட்டும் இறுதிப் போட்டி நோக்கி காத்துக்கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக மிட் நைட் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இதன்மூலம் அசீம் விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் இறுதிப்போட்டிக்கு தகுதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

ஷிவினுக்கு ஆதரவு :

இதனால் இந்த சீஸனில் வெற்றிபெறப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து இருக்கிறறது. இப்படி ஒரு நிலையில் நேற்று வெளியான ஷிவின் ப்ரோமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வனிதா ‘நிச்சயமாக இந்த சீசனில் சிறந்த போட்டியாளர்களில் ஒருவர். தகுதியான போட்டியாளரான ஷிவினுக்கு வாக்களியுங்கள்’ என்று ஷிவினுக்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார்.

தொடர்ந்து அஸீமிற்கு ஆதரவு தெரிவித்த வனிதா :

வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் ஷாக்காகி போய் இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமே இந்த சீசன் ஆரம்பத்ததில் இருந்தே அஸீமிற்கு தான் வனிதா ஆதரவாக பேசி வருகிறார். மேலும், அடிக்கடி விக்ரமனை கடுமையாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் கூட விக்ரமனுக்கு வாக்களிக்க சொல்லி திருமாவளவன் பதிவை ஒன்றை போட்டு இருந்தார். இது பெரும் விவாதகமாக மாறியது.

-விளம்பரம்-

திருமாவின் ட்வீட்டுக்கு பதிலடி :

இதனை விமர்சித்த வனிதா ‘இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்… ஒரு மரியாதைக்குரிய அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் எம்.பி.யும், ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் போட்டியாளருக்கு வாக்களிக்கும்படி தனது ஆதரவாளர்கள் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும் ? மிகவும் புத்திசாலித்தனமான அரசியல் நாடகம், பொதுமக்களின் அன்பு மற்றும் பாசத்துடன் விளையாடுவதற்கு மைண்ட் கேமைப் பயன்படுத்துகிறார்

கேலி செய்யும் ரசிகர்கள் :

அரசியல் நோக்கங்களுக்காக. கமல்ஹாசன் தனது கட்சிக்கோ வேட்பாளருக்கோ வாக்களிக்கவோ அல்லது தனது கட்சிப் போட்டியாளரான சினேகனை ட்விட்டரில் ஆதரிக்கவோ கேட்பதில்லை.. விக்ரமன் வெற்றி பெற்றால் அது அரசியல் ஆதரவு மற்றும் சமூக ஆதரவால் மட்டுமே, பார்வையாளர்கள் அல்லாத வாக்குகள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் அவர் திடீரென்று ஷிவினுக்கு ஆதரவாக பதிவிட்டதை பார்த்த பலர் அசீம் ஜெய்க்க மாட்டார்னு இப்போ ஷிவின் பக்கம் திரும்பிடீங்களா என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement