மீண்டும் காவல் நிலையம் வந்த சூர்யா தேவி . கண்ணீர் மல்க கொடுத்த பேட்டி.

0
83266
surya
- Advertisement -

சமூக வளைதளத்தில் எந்த பக்கத்தை புரட்டி பார்த்தால் தற்போது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவின் திருமண சர்ச்சை குறித்து பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து வனிதாவை திட்டி தீர்த்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு வந்தார் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவி மீது வனிதா அளித்திருந்த புகாரின் பேரில் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

-விளம்பரம்-

நேற்று இரவு 7 மணிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சூர்யா தேவி நேற்று இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே இருந்தார். பின்னர் இன்று மதியம் ஜாமீனில் வெளியே வந்த சூர்யா தேவி வனிதாவுக்கு போலீஸ் ஆதரவாக செயல்படுவதாகவும், வனிதா மீது நான் அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் போலீசார் ஏன் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

கைது செய்யப்பட்ட பின்னர் இனி வனிதா பற்றி பேசமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த சில மணி நேரத்தில் வனிதா குறித்து பேசி மீண்டும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் சூர்யா தேவி. மூஞ்சிக்கு நேராக வந்து ஒரு லைவ்வில் கூட வந்து பேச முடியவில்லை. நீ எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சவுண்ட் போட்டுக் கொண்டிருக்கிற. உன்னை நான் விட மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நேற்று காவல் நிலையத்தில் இருந்து ஜாமீன் பெற்று வந்த சூர்யா தேவி காவல் நிலையத்தில் தன்னுடைய செல்போனை வாங்கி வைத்துள்ளதாக அதனை பெற மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது பேட்டியளித்துள்ள சூர்யா தேவி, நான் எவ்வளவுதான் அறைவேன் நான் என்ன தவறு செய்தேன். வனிதா செய்த தவறினால் என்னுடைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருக்கிறார் இதோ அந்த வீடியோ.

-விளம்பரம்-
Advertisement