இன்ஸ்பெக்ட்டர் முன்பே செருப்பை கழட்டி அடிக்க சென்றுள்ள வனிதா – வைரல் வீடியோ.

0
35486
vanitha

சமூக வளைதளத்தில் எந்த பக்கத்தை புரட்டி பார்த்தால் தற்போது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவின் திருமண சர்ச்சை குறித்து பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து வனிதாவை திட்டி தீர்த்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு வந்தார் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவி மீது வனிதா அணிந்திருந்த புகாரின் பேரில் தற்போது சூர்யா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வனிதா அளித்த அந்த புகாரில தனது திருமணம் குறித்தும், தனது கணவர் குறித்தும் சூர்யாதேவி என்ற பெண் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு, அவதூறு பரப்பி வருவதாகவும். மேலும் சூர்யா தேவி தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வனிதா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த வடபழனி மகளிர் போலீசார் சூர்யாதேவியை நேற்று (ஜூலை 22) இரவோடு இரவாக கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- Advertisement -

ஏற்கனவே வனிதா விஜயகுமார் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக சூர்யா தேவி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார். வனிதா விஜயகுமார், சூர்யா தேவி என்பவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும், நடிகை வனிதா விஜயகுமார் மீது சூரியா தேவியால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் இரண்டு தரப்பினரிடமும் வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் சூர்யா தேவியை எச்சரித்து அனுப்பியுள்ளனர்

இப்படி ஒரு நிலையில் தான் சசூர்யா தேவி நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் சூர்யாவை கண்டதும் வனிதா இன்ஸ்பெக்டர் முன்பே செருப்பை கழட்டி அடிக்க சென்றுள்ளதாக அவரின் வழக்கறிஞ்சர் பேட்டி கொடுத்துள்ளார். மேலும், சூர்யா தேவியின் யூடுயூப் சேனலிலும் அவரின் தோழி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement