என்னை செருப்பால் அடிக்க வந்தாங்க – ஜாமினில் வெளிவந்த சூர்யா அதிரடி பேட்டி.

0
11364
surya

சமூக வளைதளத்தில் எந்த பக்கத்தை புரட்டி பார்த்தால் தற்போது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவின் திருமண சர்ச்சை குறித்து பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து வனிதாவை திட்டி தீர்த்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு வந்தார் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவி மீது வனிதா அணிந்திருந்த புகாரின் பேரில் தற்போது சூர்யா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

வனிதா அளித்த அந்த புகாரில தனது திருமணம் குறித்தும், தனது கணவர் குறித்தும் சூர்யாதேவி என்ற பெண் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு, அவதூறு பரப்பி வருவதாகவும். மேலும் சூர்யா தேவி தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வனிதா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த வடபழனி மகளிர் போலீசார் சூர்யாதேவியை நேற்று (ஜூலை 22) இரவோடு இரவாக கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பாக ஜாமினில் வெளிவந்த சூர்யா தேவி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நேற்று இரவு என்னிடம் பேச வேண்டும் என்றுதான் போலீசார் அழைத்தார்கள். ஆனால், என்னுடைய வழக்கறிஞர். இந்த சமயத்தில் செல்ல வேண்டாம் என்று கூறினார். இருப்பினும் எனது வழக்கறிஞரிடம் சமரசம் பேசுவதற்காக தான் வரச் சொல்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், இங்கு வந்து பார்த்தால் என்னை கைது செய்து ரிமாண்ட் செய்து விட்டார்கள் போலீசார் மனிதனுக்கு மட்டும் ஆதரவாக பேசினார்கள்.

என்னை கண்டதும் வனிதா காலில் இருந்த செருப்பை கழட்டி செருப்பால அடிப்பேன் என்று சொன்னார். அதற்கு நான் எங்கே அடி பார்க்கலாம் என்று சொன்னேன். அதற்கு அவரை எதுவும் சொல்லாமல் என்னை மட்டும் இழுத்துச் சென்று ஒரு தனி அறையில் அமர வைத்து விட்டார்கள். நான் அவர் மீது அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை நான் கஞ்சா விற்பதாக பொய்யான தகவலை அவர் கூறியிருந்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் இல்லை என்றால் அவரைப் பற்றி நான் தொடர்ந்து வீடியோ போட்டுக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறியுள்ளார் சூர்யா தேவி.

-விளம்பரம்-
Advertisement