ஏன் பிக் பாஸ கம்பேர் பண்றீங்க ? லாஸ்லியா சாப்பிடாம அவர் இப்போ சாப்பிடறது இல்லையா – லாஸ்லியா ரசிகர்களை கடுப்பாக்கிய வனிதா.

0
7555
vanitha

வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக வே பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இவர்களது திருமண விவகாரம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த விவகாரம் குறித்து அடிக்கடி போட்டிகளில் பங்கேற்ற வனிதா பேசிய பல்வேறு கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வனிதாவும் பீட்டர் பவுலும் இணைந்து கொடுத்த பேட்டி ஒன்றில் லாஸ்லியா குறித்து பேசியது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது,

வீடியோவில் 23 :45 நிமிடத்தில் பார்க்கவும்

அந்தப் பேட்டியில் பேசியுள்ள அவர்என்னை சாதாரண பெண்களோடு ஒப்பிடாதீர்கள் நான் பல தடைகளை கண்டு தான் தற்போது இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறேன். ஜெயலலிதா, இந்திரா காந்தி போன்றவர்கள் கூட பல தடைகளை கண்டு வந்தவர்கள்தான். எனவே, என்னை வீட்டில் அடங்கி ஒடுங்கி கணவருக்கு பணிவிடை செய்யும் ஒரு சாதாரண பெண்ணோடு ஒப்பிடாதீர்கள். அதேபோல இப்போதும் பலர் என்னிடம் பிக்பாஸில் நடந்ததை ஒப்பிட்டு பேசுகிறார்கள். இது என்ன முட்டாள் தனமாக இருக்கிறது.

- Advertisement -

மேலும், நான் பிக்பாஸில் இருந்தபோது நீங்கள் இதை செய்தீர்களே? நீங்கள் அதைப்பற்றி பேசினீர்களே? இதையெல்லாம் நீங்கள் செய்தீர்களே என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கு ஒன்றை மட்டும் சொல்லுங்கள், பிக்பாஸில் இருந்தபோது சேரன் அண்ணா லாஸ்லியாவின் ஒரு தந்தையாக இருந்தார். ஆனால், இப்போதும் அவர்கள் இருக்கிறாரா? பிக் பாஸ் வீட்டில் இருந்தது போல போல தினமும் வீட்டின் பின் அமர்ந்து பேசுகிறார்களா.

இல்லை லாஸ்லியா சாப்பிடாமல் அவர் தினமும் சாப்பிடாமல் இருக்கிறாரா என்ன ? எனவே அது வெறும் ஒரு கேம் சோ தான். அங்கு யாரும் நடிக்கவில்லை, இருந்தாலும் அவரவர் அவர்களுடைய விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது ஏன் இன்னும் பலருக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement