கொரோனா தேவியை வனிதா போல இருப்பதாக காலாய்த்த மீம் கிரியேட்டர்கள் – வனிதா போட்ட டீவீட்டை பாருங்க.

0
1740
vanitha
- Advertisement -

சமீபத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தேவி சிலையோடு தன்னை ஒப்பிட்டு வந்த மீம்கள் குறித்து வனிதா ட்வீட் போட்டுள்ளார். நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் தமிழகத்தில் தற்போது இந்த வைரஸ் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தான் வருகிறது.

-விளம்பரம்-
https://twitter.com/aslaameyyy/status/1395318662798610443

இப்படி ஒரு நிலையில் கொரோனாவிற்கு சிலை வைத்து காமாட்சிபுரி ஆதினம் சார்பில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அந்த கோவிலில் 48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி வழிபடவும் இருக்கின்றனர். அந்த கோவிலில் பூசாரிகள் பூஜை செய்யும் வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கோவை இருகூர் காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கோவை இருகூர் காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : இளம் வயதில் நீச்சல் உடையில் நடித்துள்ள சிம்ரன் – தெலுங்கு காரங்க கொடுத்து வச்சவங்கயா.

- Advertisement -

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கு முன்பு அம்மை நோய், காலரா ஏற்பட்ட போது மக்கள் பல உயிர்களை இழந்தனர். அப்போது  தெய்வமே துணை என்ற வாக்கின்படி கிராமங்களிலே மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர். கோவிட்19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். 

கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பலரும் இந்த சிலையை வனிதாவுடன் ஒப்பிட்டு அவரை டேக் செய்தனர். இதற்கு வனிதா, அட கடவுளே, என்ன இது எல்லாரும் எனக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி வருகிறீர்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement