எனக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டார் – ஒரு வழியாக ஒரு பஞ்சாயத்தை முடித்த வனிதா.

0
30816
vanitha
- Advertisement -

பிக்பாஸ் புகழ் வனிதாவின் மூன்றாவது திருமண சர்ச்சை தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி இருந்தனர். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை கஸ்தூரி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படி பலர் வனிதாவின் திருமண சர்ச்சை குறித்து கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இந்த சர்ச்சையில் சூர்யா தேவியால் சிக்கியவர் தான் நாஞ்சில் விஜயன். மற்றவர்களை போலவே இவரும் வனிதா குறித்து தொடர்ந்து விளாசி வந்தார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நாஞ்சில் விஜயன் தனது யூடியூப் சேனலில் வனிதா குறித்து மக்களிடம் கருத்து கேட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். நாஞ்சில் விஜயனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா, நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவியுடன் கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் வனிதாவிடம் நாஞ்சில் , வணிதாவிடம் மன்னிப்பு கேட்டு உள்ளதாக வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வனிதா, நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து ஆரம்பம் முதல் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினார். அவர் எனக்கு எதிராக இருக்க எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் அவரைச் சந்தித்ததும் இல்லை, அவர் யார் என்பது எனக்கு தெரியாது. சூர்யா தேவி என்ற சதிகாரி தான் இந்த அனைத்து குழப்பத்திற்கும் காரணம். வழக்கம்போல கஸ்தூரி இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கியுள்ளார். என்னை பற்றி அவர் தான் அப்படி பேச வைத்திருக்கிறார். மேலும் என்னை பற்றி மக்கள் கருத்தை கேட்டு வீடியோவை பதி விட்டதை எண்ணி நாஞ்சில் விஜயன் வருத்தப்பட்டார்.

அவருக்கு என் மீது கோபம் வரக் காரணம் சம்பந்தமே இல்லாமல் அவர் மீது நான் சொன்ன குற்றச்சாட்டுகள் தான். நான் அவரின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன். அவர் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் இழுக்கப்ட்டார் என்று எனக்கு தோன்றியது. அவர் திறமை வாய்ந்த நப,ர் எனவே அவருக்கு இதுபோன்ற சர்ச்சைகளில் வளர வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர் உண்மையிலேயே அப்பாவி தான் என்றால் அவருக்கு நேர்ந்தது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement