அமைதிக்காக மதம் மாறிவிட்டேன், இத்தனை ஆண்டுகளாக இந்த மதத்தை தான் பின்பற்றி வருகிறேன் – வனிதாவின் அதிரடி அறிவிப்பு.

0
1500
vanitha
- Advertisement -

நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் மதம் மாறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்தவர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா. இவர்களின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.

-விளம்பரம்-

பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு வனிதா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார் என்று சொல்லலாம். அதற்கு பிறகு இவரைக் குறித்து பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. அதோடு இவரை பலரும் வத்திக்குச்சி வனிதா என்று தான் அலைகிறார்கள். வத்திக்குச்சி வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

- Advertisement -

வனிதா நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் சமந்தா, ரெஜினாவை ஓரம் கட்டும் அளவிற்கு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இவர் காத்து என்ற படத்திற்கு தான் நடனம் ஆடி இருக்கிறார். இந்த படத்தை தவசிராஜன் இயக்கி தயாரித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை வனிதா அவர்கள் தற்போது அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

vanitha

அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா:

அதுமட்டும் இல்லாமல் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டு இருந்தார். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே வனிதா ஒருவரை விட்டு வைக்காமல் தாக்கி விளையாடி இருந்தார். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் பார்க்க முடியும். அதே போல இந்த நிகழ்ச்சியையும் ஆரம்பத்தில் கமல் தான் தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா வெளியேறிய காரணம்:

மேலும், கமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து வனிதா அவர்கள் தாமாகவே வெளியேறினார். இது குறித்து பலரும் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு வனிதா, மன அழுத்தத்தின் காரணமாகவும், உடல் நிலை கருதியும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியேறினேன். நிகழ்ச்சி செல்கிற விதமே சரியில்லையே என்று பிக்பாஸையே குறை சொல்லி பேட்டியளித்திருந்தார். இப்படி வெளியே வந்த பிறகு வனிதா போட்டோ ஷூட், என பேட்டி என்று பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் மதம் மாறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

மதம் மாறியது குறித்து வனிதா கூறியது:

இதுகுறித்து வனிதா விஜயகுமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பது, மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்வதற்காக தான் புத்த மதத்தை பின்பற்றுகிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் இந்த மதத்தை பின் பற்றி வருகிறேன். இதனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்திருக்கிறார். இப்படி இவர் புத்த மதத்திற்கு மாறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இது எதற்கான மாற்றம்? ஒருவேளை வேறு திருமணத்திற்கான மாற்றமா? என்றெல்லாம் கிண்டல் செய்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement