நாங்கெல்லாம் பிக் பாஸ்ல இருந்தே பிரபலம், அதுக்கு மரியாதை கொடுக்கணும் – மாதர் சங்கம் எனக்கு சப்போர்ட் பண்ணல – வனிதா

0
781
vanitha

பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா. தமிழில் ஒரு சில படங்களில் நடித்த இவரது திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இதுவரை மூன்று பேருடன் குடும்பம் நடத்தி பின்னர் அவர்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். வனிதாவிற்கு ஒரு செகண்ட் இன்னிங்க்ஸை கொடுத்தது விஜய் டிவி. அதன் பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் வனிதாவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இவர் விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

vanitha

ஆனால், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து திடிரென்று விலகினார் வனிதா. இதற்க்கு அவர் சொன்ன காரணத்தில், ஆணவத்தால் என் வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்து, அவமானப்படுத்தி மோசமாக நடத்தினார்.அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : நீண்ட காமலாக தன்னை ஆங்கராக போட சொல்லி புலம்பிய மணிமேகலை – ஒரு வழியாக வாய்ப்பு கொடுத்த தொலைக்காட்சி.

- Advertisement -

வனிதா குறிப்பிட்ட அந்த அனுபவம் வாய்ந்த பெண் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தான் என்று பலரும் கூறத் தொடங்கிவிட்டனர் இதுகுறித்து விளக்கமளித்த ரம்யா கிருஷ்ணன், நோ கமெண்ட்ஸ் என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள வனிதா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்ததற்கான காரணம் எனது தனிப்பட்ட காரணம், விஜய் டிவிக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சொன்ன விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை.

அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான். அதற்குரிய மரியாதை அனைவருக்குமே கொடுத்து தான் ஆகவேண்டும். அது கொஞ்சம் தளர்வானதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன். சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது. தனிப்பட்ட விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் எனக் கேட்கிறார்கள். தற்போது

-விளம்பரம்-
Advertisement