அம்மாவை திருமணத்திற்கு அழைத்து வந்த மகள்- வைரலாகும் வனிதாவின் திருமண வீடியோ.

0
3008
vanitha
- Advertisement -

பிக் பாஸ் வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் இன்று (ஜூன் 27) வீட்டிலேயே மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்று உள்ளது. பிரபல ஸ்டார் தம்பதிகளாக விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதா,இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் இவர் நடித்தாலும் இவருக்கும் மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-
View this post on Instagram

BiggBoss Fame #Vanitha Wedding Picture

A post shared by Behind Talkies (@behindtalkies) on

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக வனிதாவின் குடும்ப பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான், மேலும், வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டுமே விவாகரத்தில் முடிந்துவிட்டது. மேலும் இவருக்கு இரண்டுபெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். ஆனால், இவரது மகன் மட்டும் இவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதையும் பாருங்க : 50 வயதை நெருங்கும் மந்திரா பேடி. இந்த வயதிலும் கொடுத்த போஸை பாருங்க.

- Advertisement -

இந்த நிலையில் வனிதா, பீட்டர் பவுல் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற செய்தியை வனிதா உறுதி செய்து இருந்தார்,. சமீபத்தில் கூட தனது திருமணம் குறித்து நேற்று வனிதா தனது யூடுயூப் சேனலில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது வருங்கால கணவர் பீட்டர் பவுல் குறித்தும் தனது திருமண திட்டங்கள் குறித்தும் பேசி இருந்தார் வனிதா.

View this post on Instagram

#Vanitha Weds #Peterpaul Wedding Video

A post shared by Behind Talkies (@behindtalkies) on

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் கிறிஸ்துவ முறையில் நடைபெற்றுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்குபெற்ற வனிதாவின் திருமண புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இவரது திருமண வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் வனிதாவின் மகள் வனிதாவை அழைத்து வந்து தனது புதிய தந்தையின் கையில் ஒப்பாடைகிறார்.

-விளம்பரம்-
Advertisement