என்னை நான் எதாவது செய்துகொள்வேன்,அப்புறம் நீங்க தான் கொலைகாரனா மாறுவீங்க. எச்சரிக்கை விடுத்த வனிதா.

0
26488
vanitha

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திகள்தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.வனிதா 3-வது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், எலிசபெத்திற்கு விவாகரத்து கொடுக்காமலேயே பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதன் பின்புதான் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.ஆரம்பத்தில் இது தனது திருமணம்தான் என்று கூறி வந்த வனிதா எலிசபெத்தின் புகாருக்கு பின்னர் இது திருமணம் கிடையாது வெறும் அன்பின் பரிமாற்றம் மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்தார். இருப்பினும் தனது திருமணம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் வனிதா. சமீபத்தில் வனிதாவின் திருமணத்தை விமர்சித்த பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றவர்களை வனிதா திட்டி தீர்த்ததால் அவர்கள் இருவருமே வானிதாவிற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மன்னிப்பு கேட்டார்கள்.

இதையும் பாருங்க : அவர் எனக்கு தளபதி கிடையாது. விஜய் குறித்து பேசிய வனிதா. வறுத்தெடுத்த சூர்யா அக்கா.

- Advertisement -

அதே போல முன்பை விட வனிதாவுக்கு பல பக்கங்களிலில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. அவ்வளவு ஏன் சூர்யா தேவி என்பவர் வனிதாவை திட்டுவதர்க்கு என்றே ஒரு யூடுயூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் வனிதா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், என்ன நடந்தது என்று ஒன்றும் தெரியாமல் உங்களின் மகிழ்ச்சிக்காக என்னை கேலி செய்யும் அனைவருக்கும் தான் இது ஒருவரை தாக்கிப் பேசுவது அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களை பதிவிடவும் சட்டத்திற்கு புறம்பானது தான். #CyberBulling ஒன்றும் வேடிக்கை கிடையாது.

அது உங்களின் வாழ்க்கையை பறித்துவிடும் நீங்கள் செய்வதை அனைத்தையும் நான் சீரியஸாக எடுத்துக் கொண்டு மன அழுத்தத்தினால் என்னை ஏதாவது செய்துகொண்டாள் நீங்கள் அனைவருமே கொலைகாரர் ஆகிவிடுவீர்கள் எனவே ஒருவருக்கு இதை செய்யும் முன்பு நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் நான் சட்ட ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை எனவே எனக்கு எந்த பாதிப்பும் கிடையாது கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை நான் நம்புகிறேன் அவருக்கு மட்டும்தான் நான் பதில் சொல்லுவேன் மேலும் உங்கள் அனைவருக்கும் உண்மை என்ன என்பது தெரியாது இப்படியெல்லாம் நீங்கள் எழுதுவதால் நான் யார் என்பதை காட்டப் போவதில்லை ஆனால் கண்டிப்பாக நீங்கள் யார் என்பதை காண்பிக்கும் என்று பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement