கைக்குழந்தையாக இருக்கும் வனிதாவை கொஞ்சும் விஜயகுமார் – வனிதா பகிர்ந்த புகைப்படம்.

0
1157
vanitha
- Advertisement -

பழம் பெரும் சினிமா தம்பதிகளான விஜய குமார்- மஞ்சுளா விற்கு 4 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளைகள் இருப்பது நமக்கு தெரியும்.விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார்.விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர்.

-விளம்பரம்-

மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார்.விஜயகுமார் குடும்பத்தில் கவிதாவை தவிர மற்ற அனைவருமே நடிகர்கள் தான். இதில் அருண் விஜய் மட்டும் தான் இப்போதைக்கு நடித்து வருகிறார். மற்ற அனைவரும் திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டனர்.

- Advertisement -

இதில் வனிதா விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பின்னர் ராஜ்கிரனின் மாணிக்கம் படத்தில் நடித்த வனிதா பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். வனிதாவுக்கும் விஜயகுமார் குடும்பத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வனிதாவை விஜயகுமார் குடும்பத்தினர் அனைவருமே ஒதுக்கி வைத்து விட்டார்கள். இதனால் தனது இரண்டு மகள்களுடன் தனியாகத்தான் வசித்து வருகிறார் வனிதா.

இருப்பினும் தனது குடும்பத்தினர் மீது தற்போதும் பாசம் காண்பித்து வரும்வனிதா அடிக்கடி தனது குடும்பத்தினர் குறித்து பதிவுகளை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று நடிகர் விஜயகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை வனிதா தனது தந்தையுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement