என் அரிசி மூட்டைக்கு 14 வயது ஆகிவிட்டது – தன் கணவருடன் இருக்கும் மகளை நேரில் சென்று சந்தித்த வனிதா.

0
3998
Vanitha
- Advertisement -

தன்னுடைய இளைய மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வனிதா விஜயகுமார் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார்.

-விளம்பரம்-

திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

வனிதா நடிக்கும் படங்கள்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் வனிதா பிசியாக நடித்து வருகிறார்.

வனிதாவின் யூடியூப் சேனல் :

மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே வனிதா விஜயகுமார் 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் பிறந்தார்கள். பின் சில காரணங்களால் 2007 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

-விளம்பரம்-

வனிதா திருமணம்:

இதனை அடுத்து 2007ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெயராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் தான் ஜெனிதா ராஜன். பின் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். பின் தன்னுடைய இரண்டு மகள்களையும் வனிதா தன்னுடன் வைத்துக்கொண்டு பார்த்து வந்தார். ஆனால், தன்னுடைய மகள் வேண்டும் என்று வனிதாவின் இரண்டாவது கணவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி வனிதாவின் இரண்டாவது மகள் அவருடைய இரண்டாவது கணவருடன் இருக்கிறார்.

வனிதாவின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்:

இந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை வனிதாவின் இளைய மகள் ஜெனிதாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வனிதா ஹைதராபாத் சென்றிருக்கிறார். அங்கு அவர் தன்னுடைய மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டு இருக்கிறார். இது அவருடைய மகளின் 14வது பிறந்தநாள். மேலும், தன் மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய போது எடுத்த புகைப்படத்தை வனிதா சோசியல் மீடியாவில் பகிர்ந்து எங்கள் அரிசி மூட்டைக்கு 14 வயது ஆகிவிட்டது என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement