கஸ்தூரி, ரவீந்தர்,நாஞ்சில், லட்சுமியின் லைவ் பேட்டியில் வனிதாவின் முன்னாள் கணவர்.

0
9332
kasthuri
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் நேற்று முதல் வனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகிய 3 பேரின் பிரச்சனைகள் தான் தற்போது ட்விட்டரில் கொழுந்துவிட்டு எரிகிறது. சமீபத்தில் வனிதாவின் பிரச்சனையில் கருத்து தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் சேட்டில் வனிதா கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து இருந்தார்.வயது வித்தியாசம் பார்க்காமல் வாடி போடி, செருப்பால் அடிப்பேன் என்றெல்லாம் லட்சுமி ராமகிருஷ்ணனை ஒரு கை பார்த்து விட்டார் வனிதா. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதேபோல கஸ்தூரியையும் ட்விட்டரில்வறுத்து எடுத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன், கஸ்தூரி, நடிகை ரித்திகா ஆகியோர் லைவ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

இந்த லைவ் பேட்டி சென்று கொண்டு இருக்கும் போதே வனிதா அரவிந்த் இருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் இந்த நிலையில் நானும் கலந்து கொள்ளலாமா என்று கேட்டார் வனிதா. அதற்கு மற்றவர்கள் அனைவருமே சம்பாதித்துவிட கஸ்தூரியும் எனக்கு 4,30 மணிக்கு இன்னொரு பேட்டி இருக்கிறது. அதனால் நான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டு சென்று விட்டார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கஸ்தூரி ஆரம்பித்துள்ள புதிய யூடியூப் சேனலில் ரவீந்திரன் லட்சுமி ராமகிருஷ்ணன் நாஞ்சில் விஜயன் கஸ்தூரி ஆகிய நால்வரும் லைவ் பேட்டியில் கலந்துகொண்டு வனிதா குறித்து விவாதித்தனர். அப்போது கஸ்தூரிக்கு வனிதாவின் முன்னாள் கணவர் ஒருவர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார் மேலும் நானும் இந்தப் பேட்டியை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் நானும் இந்த பேட்டியில் கலந்து கொள்ள யோசித்துக்கொண்டு இருக்கிறேன் ஆனால் எனக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கஸ்தூரி, அந்த குழந்தையின் அப்பா ரொம்ப நேரமாக நம்முடன் பேச தொடர்பு கொண்டு இருக்கிறார். ஆனால், அவருக்கு சிக்னல் கிடைக்கவில்லை சிக்னல் கிடைத்ததும் அவர் நம்மிடம் பேசினார்.அவர் ஹைதராபாத்தில் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தனது குழந்தையை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். என்று கூறியுள்ளார் கஸ்தூரி .இதை வைத்து பார்க்கும்போது ஹைதராபாத்தில் இருக்கும் வனிதாவின் இரண்டாம் கணவர் ஆகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது

-விளம்பரம்-
Advertisement