நான் வனிதா அக்கா வீட்டுக்கு போனது உண்ம தான். ஆனா, திருமணம் பத்தி எனக்கு – பீட்டர் மகன் பேட்டி.

0
89706
vanitha
- Advertisement -

பிக் பாஸ் வனிதாவின் மூன்றாவது திருமணம் சனிக்கிழமை (ஜூன் 27 ) அவரது வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. மேலும், பீட்டர் பவுல் தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார் அவரது மனைவி.

-விளம்பரம்-

சமீபித்தல் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டரின் மனைவி, என் கணவருக்கு சரியான வருமானம் கிடையாது, அவருக்கு வேலை செய்யும் இடத்தில் எல்லாம் பழக்கம் இருக்கிறது. திருமண செய்தியை அறிந்து நான் கேள்விப்பட்ட போது நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், காவல் நிலையத்திலேயே வனிதாவை பற்றி உனக்கு தெரியாதாம இன்னும் 6 மாசமோ ஒரு வருசமயோ தொரத்திவிட்ற போறாங்கனு சொன்னாங்க.

- Advertisement -

பீட்டர் மற்றும் எலிசபெத்திற்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். ஆனால், வனிதாவின் வீட்டிற்கு பீட்டரின் மகன் வந்ததாகவும் அவருக்கு எல்லாம் தெரியும் என்றும் வனிதா கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் பீட்டரின் மகன் ஜான் எட்வர்ட் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று தனது தந்தை மற்றும் வனிதா குறித்தும் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.

அதில், தனது தந்தை மறுவாழ்வு மையத்தில் இருந்தது உண்மை தான் என்று கூறிஇருந்தார். மேலும், என் தந்தை டி- டொடலர் கிடையாது. மேலும், என்னிடமே குடித்துவிட்டு வந்து உன் அம்மாவை போலவே வேறு ஒரு ஆன்டி வந்தால் உனக்கு ஓகேவா என்று கேட்டார் என்றும் கூறியுள்ளார். அவரின் திருமண செய்தி எல்லாம் கேட்டு எனக்கு சலித்து போச்சி. அவருக்கு அவ்வளவு பெண்களுடன் தொடர்பு இருந்தது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், வனிதா வீட்டிற்கு சென்றது குறித்து பேசிய பீட்டரின் மகன், வீட்டுக்கு சென்றது உண்மை தான். ஆனால், திருமணம் பத்திரிகை வெளியான போது என் அப்பா அது எல்லாம் பொய் என்று சொன்னர். பின்னர் அது வைரலாகி விட்டது, எனவே நான் உண்மையாக திருணம் செய்துகொள்ள போகிறேன் என்று சொல்லி அவர் தான் என்ன செட்டில்மென்ட் வேண்டும் என்று சொன்னார்.

Advertisement