நேத்து கல்யாணம், இன்னிக்கு வனிதாவின் மூன்றாவது கணவர் மீது முன்னாள் மனைவி புகார்.

0
4103
- Advertisement -

சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். பல மொழி படங்களில் வனிதா நடித்து இருந்தாலும் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் சீரியல், நிகழ்ச்சி என பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
View this post on Instagram

#Vanitha Weds #Peterpaul Wedding Video

A post shared by Behind Talkies (@behindtalkies) on

இந்நிலையில் நடிகை வனிதா அவர்கள் பீட்டர் பாலை திருமணம் செய்ததற்கு பீட்டர் பால் மீது அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதா, பீட்டர் பால் என்பவரை நேற்று மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் பாருங்க : சாத்தான்குளம் மரணம் குறித்து விவேக் போட்ட ட்வீட் – கடுப்பான ரசிகர்கள்.

- Advertisement -

அதில் அவர் பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்தார். பீட்டர் பாலும், அவரது மனைவி எலிசபெத்தும் கருத்து வேறுபாடு காரணமாக 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளார்.

View this post on Instagram

BiggBoss Fame #Vanitha Wedding Picture

A post shared by Behind Talkies (@behindtalkies) on

முறையாக விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மீண்டும் வனிதாவின் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் கிளப்பியிருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement