சாத்தான்குளம் மரணம் குறித்து விவேக் போட்ட ட்வீட் – கடுப்பான ரசிகர்கள்.

0
20717
vivek
- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழகம் முழுவதும் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31). இவர்கள் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே செல்போன் கடை வைத்திருக்கிறார்கள். ஜெயராஜ் என்பவர் கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்து வைத்துள்ளார்.

-விளம்பரம்-

இதனால் காவல் துறை அதிகாரி ஜெயராஜ் இடம் விசாரித்து உள்ளார். அப்போது காவல்துறையினருக்கும், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து காவல்துறையினர் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தந்தை மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதையும் பாருங்க : அர்ஜுனின் தந்தையை பார்த்துள்ளீர்களா ? அட, அவரும் இவ்வளவு பெரிய நடிகரா ?

- Advertisement -

பின் இவர்கள் இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து உள்ளனர். ஆனால், இருவருமே சிகிக்சை பலனின்றி தந்தை, மகன் அநியாயமாக மரணமடைந்தார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் விவேக் பதிவிட்ட கமன்ட் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சாத்தன் குளம் சம்பவம் குறித்து ட்வீட் செய்திருந்த விவேக், ஒரு குறைந்த பட்ச குற்றத்துக்கு, மரணம் தான் தண்டனையா? தங்கள் குடும்பம் , தங்கள் உயிர் பற்றி கவலை கொள்ளாமல், இந்த கொரொனா காலத்தில் கடமை ஆற்றும் காவல் துறைக்கு இந்த களங்கம் வரலாமா? சாத்தான் குளம் வற்றலாம்! ஆனால் நீதிக்குளம் வற்றக்கூடாது என்று ட்வீட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

விவேக் டீவீட்டிற்கு ரசிகர்களின் சில கமெண்டுகள், சார் நீங்க பெரிய ஆள்…ஈயம் பூசன மாதிரியும் இருக்கணும்..பூசாத மாதிரியும் இருக்கணும்.. நேரடியாக தான் கண்டனம் தெரிவியுங்களேன்… உங்களை தூக்கில் போட்டு விட மாட்டார்கள் என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். உங்களின் இந்த பதிவை பார்த்த பிறகு உங்கள் மேல் உள்ள மரியாதை குறைந்தது என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர்.

இந்த கருத்துக்களை எல்லாம் கண்ட விவேக் உடனே மற்றும் ஒரு டீவீட்டை போட்டிருந்தார். அதில், குறைந்த பட்ச குற்றம் என் நான் குறிப்பிட்டது ஊரடங்கில் கடை திறந்து வைத்ததைத் தான். அந்த சின்ன தவறுக்கு, சித்ரவதையும் மரணமும் தண்டனையா? என்றே வேதனையுடன் கேட்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement