என்ன பொறுத்த வர இந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் தான் ஜெயிக்கணும் – பிக் பாஸுக்கு பின் வருணின் முதல் லைவ்.

0
527
varun
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 87 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கும் நிலையில் பிக் பாஸில் மிகவும் எதிர்பார்கப்படும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டாஸ்கில் முதல் நாளே நிரூப் வெளியேறி இருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-81.png

நிரூப் வெளியேறியதை தொடர்ந்து இரண்டாம் டாஸ்க்கிலேயே பாவனியும் தாமரையும் வெளியேறினார். இவரை தொடர்ந்து நேற்று நடைபெற்ற டாஸ்கில் ராஜு, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய 5 பேர் மட்டும் இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கை விளையாடினர். இதில் பிரியங்கா மற்றும் ராஜு வெளியேற்றப்பட்டனர்.

- Advertisement -

Ticket To Finale டாஸ்கை வென்றது யார் :

நேற்று நடைபெற்ற இறுதி டாஸ்கில் சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய மூவர் மட்டும் விளையாடினர். இதில் சஞ்சீவ் வெளியேற சிபி மற்றும் அமீர் இறுதி கட்டத்திற்கு முன்னேறினர். இதில் வெற்றி பெரும் ஒருவர் Ticket To Finale வாய்ப்பை வென்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள் என்று இருந்த நிலையில் தற்போது அமீர் இந்த டாஸ்கில் வெற்றி பெற்று இருக்கிறார்.

Physical டாஸ்க்குகள் எங்கே :

This image has an empty alt attribute; its file name is image-80.png

இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல பிக் பாஸ் வரலாற்றிலேயே Ticket To Finale டாஸ்கை வென்ற முதல் வைல்டு கார்ட் போட்டியாளர் அமீர் தான். இதுவரை நடைபெற்ற Ticket To Finale டாஸ்க்கிலேயே இந்த சீசன் டாஸ்க் தான் படு மொக்கையாக போனது. அதிலும் டாஸ்க் என்றால் சிறப்பாக ஆடும் நிரூப்பை முதல் சுற்றிலேயே வெளியேற்றிவிட்டனர்.

-விளம்பரம்-

Ticket To Finale டாஸ்க் பற்றி வருண் :

இந்த டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்தே ரசிகர்கள் பலரும் வருண், அக்ஸ்ராவை அதிகம் மிஸ் செய்தனர். அதிலும் முட்டை உடைக்கும் டாஸ்க்கில் ராஜு சும்மா தொட்டதற்கு எல்லாம் பாவனி குறை சொன்ன போது அக்ஷரா இருந்திருக்க வேண்டும் இந்த டாஸ்க்கில் என்று தான் தோன்றியது. இப்படி ஒரு நிலையில் லைவ் ஒன்றில் வரும் Ticket To Finale டாஸ்க் பற்றி பேசியுள்ளார்.

வீடியோவில் 10 : 15 நிமிடத்தில் பார்க்கவும்

யார் வெற்றி பெற வேண்டும் :

அதில், Ticket To Finale டாஸ்க்கில் ஜெயித்துவிட்டு நேராக பைனலுக்கு சென்றுவிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், முடியாமல் போய்விட்டது பரவாயில்லை. என்னை தாமரை அக்கா தான் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க என்று கூறியுள்ளார். மேலும், இந்த சீசனில் யார் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டதற்கு ‘ராஜு அல்லது தாமரை தான் ஜெயிக்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார் வருண்.

Advertisement