அக்ஷராவின் மண்டையில் வருண் போட்ட கலர் கோலம் குறித்து அக்ஷரா பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் ஆகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது ஆனார். பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.
அதோடு பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் அக்ஷரா மற்றும் வருண் இருவருமே நல்ல நண்பர்களாக, நல்ல புரிதலுடன் விளையாடியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனாலே இவர்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் திரண்டது. ஒரு நண்பர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற உதாரணத்திற்கு விளக்கமாக ரெண்டு பேரும் இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு கடுமையான டாஸ்க்காக இருந்தாலும் அதை எதிர்கொண்டு விளையாடினார்கள் அக்ஷரா-வருண். அதற்காகவே இவர்களுக்கு என்று ஒரு தனி ஆர்மி உருவானது.
அக்ஷரா மற்றும் வருண் டபிள் எவிக்ஷன்:
அதேபோல வருண் பெரிய இடத்து பிள்ளையாக இருந்தாலும் எந்த இடத்திலும் அதை வெளிப்படுத்தாமல் இயல்பாக நடந்து கொண்டது பலரையும் ஈர்த்தது. மேலும், அக்ஷரா மற்றும் வருண் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத முதல் முறையாக டபிள் எவிக்ஷன் இந்த சீசனில் நடந்தது. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இவர்கள் இருவரும் ஒரே நாளில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இவர்கள் இருவரும் வெளியேறியதை குறித்து பலரும் எப்படி வெளியேற்றலாம்? என்று கொந்தளித்து போய் கருத்து போட்டு இருந்தார்கள்.
அக்ஷரா-வருண் நடிக்கும் படம்:
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் அக்ஷரா-வருண் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதோடு இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுவும் இருவரும் சேர்ந்து ஒன்றாக ஒரே படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் அக்ஷரா மற்றும் வருண் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்றவுடன் ரசிகர்கள் மத்தியில் பயங்கர குஷியை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும்,
அக்ஷரா-வருண் முத்த காட்சி:
அக்ஷ்ரா-வருண் முத்தம் என்று பல மீம்ஸ்களும், புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதற்கு அக்ஷரா, நான் வருணுக்கு முத்தம் கொடுத்தேன் என்று சொல்வதெல்லாம் பொய். உண்மையில் என்ன நடந்தது என்றால், நான் குழுவுருக்காக சொட்டர், தலையில் குல்லா எல்லாம் போட்டு இருந்தேன். டாஸ்கில் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். எல்லோரும் தூங்கிவிட்டார்கள். நானும் அவனும் தான் விழித்திருந்தோம். அப்போது வருண்- நான் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. அதற்கு தான் கிட்டே போய் நான் ‘குட் நைட்’ என்று சொல்லி இருந்தேன்.
அக்ஷரா வெளியிட்டு உள்ள வீடியோ:
அதை தான் அவர்கள் ரொமான்ஸ் பாடல் எல்லாம் போட்டு விட்டு பிக் பாஸ் வீட்டில் முத்த காட்சி என்று மீம்ஸ் போட்டு இருந்தார்கள். அந்த மாதிரி எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை என்று கூறி இருக்கிறார். இந்நிலையில் அக்ஷரா அவர்கள் வருண் குறித்த ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ஹோலிப் பண்டிகைக்காக வருண் செய்த வேலையைப் பாருங்கள் என்று தலையை காண்பிக்கிறார். கலர்கலராக அவள் தலை முடி முழுவதும் இருக்கிறது. இரவு வாக்கிங் போகலாம் என்று வருண் கூட்டிட்டு போய் சாயாம் அடித்து விட்டான். எவ்வளவு வாஷ் பண்ணாலும் என்னுடைய முடியும், என் காரில் இருக்கும் கலரும் போகவில்லை. இதற்காக வருணை நிச்சயமாக பழிவாங்குவேன். i hate you வருண் என்று அக்ஷரா கூறி இருக்கிறார்.