விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன்- நிலா திருமணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் தடபுடலாக செய்து கொண்டிருந்தார்கள். நிலாவின் அப்பா, அம்மாவால் எதுவும் பேச முடியவில்லை. பின் கோயிலுக்கு எல்லோருமே கிளம்பி வந்து விட்டார்கள். நிலா ரொம்ப சந்தோஷமாக இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே திருமணத்தை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். ஆனால், சோழன் மட்டும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ? நிலாவின் அப்பா கல்யாணத்தை தடுத்து நிறுத்தி விடுவாரோ? என்ற பயத்திலேயே இருந்தார். சேரன், சோழனை சமாதானம் செய்தார். இருந்தாலும் சோழனால் அந்த பதட்டத்தில் இருந்து வர முடியவில்லை.

சீக்கிரம் நிலாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் புலம்பி கொண்டிருந்தார். சோழன், திருமணம் நின்று விடுமோ? என்ற பயத்திலேயே இருந்தார். இதை கவனித்த நிலா, நம் இருவருக்கும் திருமணம் கண்டிப்பாக நடக்கும். நீங்கள் கவலைப்படாதீர்கள். இந்த தருணங்களை சந்தோஷமாக என்ஜாய் பண்ணுங்கள் என்றெல்லாம் சொன்னார். ஒரு வழியாக சோழன்- நிலா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், நிலாவின் அப்பா, அம்மாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை.
அய்யனார் துணை:
இருந்தாலும் நிலாவிற்காக அமைதியாக இருந்தார்கள். அதன் பின் நிலா-சோழன் இருவரையும் அய்யனார் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். திருமணத்திற்கு பிறகு நடக்க வேண்டிய சடங்குகளை எல்லாம் சேரன் வீட்டில் செய்தார்கள். அதை எல்லாம் பார்த்து நிலாவின் அப்பாவிற்கு கடுப்புதான் ஆனது. இருந்தாலும் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தார். சோழன் சந்தோஷத்தின் உச்சத்திலேயே இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலாவின் பெற்றோர்கள் அங்கிருந்து கிளம்புகிறார்கள். நிலா தன்னுடைய அப்பா அம்மாவை வழியனுப்பி வைக்கிறார். அதற்குப்பின் நிலா, எப்போதும் போலவே ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், சோழன் மட்டும் நிலா தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டது நினைத்து சந்தோஷப்பட்டு ஒரு தனி உலகில் பறந்து கொண்டிருக்கிறார். பின் சோழன், நிலாவுடன் நெருக்கமாக உட்காருவது பேசுவது என்று சந்தோஷத்தில் இருக்கிறார். அதற்குப்பின் நிலா-சோழன் இருவரும் கோயிலுக்கு கிளம்பி போகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
நிலாவும், சந்தோசமாக சோழனின் தோள் மீது கை போட்டு பைக்கில் செல்கிறார். அதற்கு பின் பாண்டியன் கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது வந்த வானதி, திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். பாண்டியனுமே சந்தோஷமாக அதற்கு பதில் கொடுக்கிறார். அப்போது வானதி, நிலா சொன்னவுடன் அவசர அவசரமாக திருமணம் செய்தீர்கள். நான் கேட்டால் செய்வீர்களா? உங்கள் வீட்டில் எல்லோருமே நிலாவிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று பொறாமையில் வழக்கம் போல சண்டை போடுகிறார். பாண்டியனும் எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், வானதி கேட்பதாகவே இல்லை






