எவ்ளோவோ நல்ல விஷயம் பண்ணி இருக்கிறேன் அதுக்கெல்லாம் ட்ரெண்ட் ஆவல, சும்மா பாத்தேன் – வைரல் பெண்ணின் பேட்டி.

0
893
preetha
- Advertisement -

தமிழ் சினிமா உலகிலேயே அதிக சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் என்றால் சிம்பு தான். அந்த அளவிற்கு அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறார். சினிமா முதல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என பல பிரச்சனைகளில் சிம்பு மாட்டி இருக்கிறார். இதனால் இவர் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருந்தார். இதுகுறித்து கூட இவர் பல மேடைகளில் பேசி இருந்தார். சமீபத்தில் மாநாடு பட விழாவின்போது கூட சிம்பு மனஅழுத்தத்தினால் தான் பட்ட கஷ்டங்களை பேசியிருந்தார். எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டு தான் வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-115-1024x683.jpg

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இருந்தும் நடுவில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. பின் சின்ன இடைவேளைக்கு பிறகு சிம்பு செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினார். அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

- Advertisement -

சிம்புவுக்கு டாக்டர் பட்டம் :

அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வந்த மாநாடு படம் பல தடைகளை கடந்து வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருக்கிறார். மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க சில தினங்களுக்கு முன் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருந்தது.

This image has an empty alt attribute; its file name is image-80-1024x572.png

ஒரே லுக்கில் வைரலான பெண் :

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை ஐசரி கணேஷ் வழங்கினார். டாக்டர் பட்டம் வழங்கிய பின் தந்தை டி ஆர் ராஜேந்திரன் மற்றும் தாயிடம் சிம்பு ஆசீர்வாதம் வாங்கி இருந்தார். எனது இந்த நிலைமைக்கு முழு காரணம் எனது தாயும், தந்தையும் தான். சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது அவர்களால் தான் என்று சிம்பு கூறி இருந்தார். அதற்கான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை பார்த்து சிம்புவின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

யார் இவங்க தெரியுமா ?

சிம்பு, டாக்டர் பட்டம் பெற்ற புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வந்த நிலையில் சிம்புவின் அருகில் இருந்த பெண் ஒருவரும் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனார். சிம்புவிற்கு பட்டம் அளிக்கும் போது பக்கத்தில் இருக்கும் பெண் குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிம்புவுடன் மேடையில் இருந்த பெண் யார் இவங்க? என்ற நெட்டிசன் எல்லாம் சோஷியல் மீடியாவில் வலை வீசி தேடி வருகிறார்கள்.

ஐசரி கணேசனின் மகள் :

சிம்பு பட்டம் வாங்கும் போது அருகில் இருந்த பெண்ணுடைய பெயர் ப்ரீத்தா கணேஷ். இவர் வேற யாரும் இல்லைங்க ஐசரி கணேசனின் சொந்த மகள் தான். மேலும், வேல்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் உடைய vice-president. பிக் பாஸ் வருணுக்கு முறைப்பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஐசரி கணேசனுடன் இணைந்து பேட்டி ஒன்றில் பேசிய இவர் ‘நான் எவ்வளவோ நல்ல விஷயங்கள் செய்திருக்கிறேன் அதற்கெல்லாம் ஃபேமஸ் ஆகவில்லை. ஆனால், சும்மா பார்த்தேன் அதற்கு இப்படி வைரலானது எல்லாம் கஷ்டமாக இருக்கு.

ப்ரீத்தாவின் முதல் பேட்டி :

இருந்தாலும் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு என்னுடைய கல்லூரி பற்றியும் என்னுடைய வேலைகள் பற்றியும் நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இன்டர்நெட்டில் தினமும் ஏதாவது புதுசாக வந்து கொண்டுதான் இருக்கும் புதுசாக ஏதாவது வந்தால் பழசை கண்டிப்பாக மறந்து விடுவார்கள் அது மாதிரி நடக்கும் என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement