100 ரூபாய் கொடுத்த விவகாரம், 8 ஆண்டுகளாக சட்டப் போராட்டம், கடும் தண்டனையில் இருந்து விடுதலையான வையாபுரி.

0
254
- Advertisement -

ஆரத்தி எடுத்தவர்களுக்கு 100 ரூபாய் கொடுத்த விவகாரத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் வையாபுரி விடுதலை செய்யப்பட்டிருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் வையாபுரி. இவர் தேனி அருகிலுள்ள முத்துதேவன்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் ராமகிருஷ்ணன். ஆனால், திரைப்படத்திற்காக வையாபுரி என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

-விளம்பரம்-

இவர் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னமருது பெரியமருது, மால்குடி டேஸ் என்ற தொடர்களில் தான் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு தான் இவர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லகன்னு என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தான் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

வையாபுரி குடும்பம்:

பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனிடையே இவர் ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார். இவருடைய மகள் ஷிவானி எல்.கே.ஜி படிக்கும்போதிலிருந்தே டிராயிங்ல் அதிக ஆர்வம். இவர் தஞ்சாவூர் பெயின்டிங் சிறப்பாகச் செய்வார். சமீபத்தில் கூட வையாபுரியின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

வையாபுரி நடிக்கும் படங்கள்:

அதன் பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வருகிறது. அந்த வகையில் நடிகர் வையாபுரி இறுதியாக யோகி பாபுவின் பேய் மாமா படத்தில் நடித்திருந்தார். தற்போது பார்த்திபன் நடித்து வரும் யுத்த சத்தம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆரத்தி எடுத்தவர்களுக்கு 100 ரூபாய் கொடுத்த விவகாரத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் வையாபுரி விடுதலை செய்யப்பட்டிருக்கிற தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

வையாபுரி மீது வழக்கு:

தமிழ்நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக நகைச்சுவை நடிகர் வையாபுரி அவர்கள் போடியில் பரப்புரை மேற்கொண்டு இருந்தார். அப்போது தனக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு வையாபுரி அவர்கள் 100 ரூபாய் வழங்கியிருக்கிறார். இதனால் வையாபுரி மீது போடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தார்கள். இந்த வழக்கு போடியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விடுதலையான வையாபுரி:

இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது விசாரணையில் நகைச்சுவை நடிகர் வையாபுரி குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை முன்னிட்டு வையாபுரியும் போடி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தற்போது வையாபுரி 8 ஆண்டுகளுக்கு பிறகு சட்ட போராட்டத்தில் இருந்து விடுதலை ஆகி இருப்பதால் நிம்மதியாக இருக்கிறார்.

Advertisement