கடந்த மாதம் குடிபோதையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிளுடன் ரகளையில் ஈடுபட்ட நிலையில் இந்த மாதம் மெட்ரோ ரயில் ஊழியரை தாக்கி தற்போது கைது வரை சென்றுள்ளார் வேல் முருகன். சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலையை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே ஒரு வழிப்பாதையாக பேரி கார்டு போட்டு மாற்றப்பட்டிருக்கிறது.
https://twitter.com/mahajournalist/status/1763894512643191177
அப்போது அந்த வழியாக பின்னணி பாடகர் வேல்முருகன் காரில் வந்திருக்கிறார். இவர் போக்குவரத்து தடை செய்வதற்காக போடப்பட்ட பேரிக்கார்டை நகர்த்தி விட்டு காரை ஓட்டி சென்று இருக்கிறார். இதைப் பார்த்த மெட்ரோ ரயில் கட்டுப்பாடான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேல் அவர்கள் தடுக்க பார்த்துகிறார். பின் அவர், இந்த வழியில் மெட்ரோ ரயில்வே பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
வேல்முருகன் செய்த வேலை:
இந்த வழியே போகக்கூடாது என்று கூறியிருக்கிறார். இருந்தாலும் வேல்முருகனுக்கும் உதவி மேலாளர் வடிவேலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், உதவி மேலாளர் வடிவேலுவை ரொம்ப மோசமாக பேசி தாக்கியிருக்கிறார். இதனால் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/shorts/rhotEkz73qk
கைதான வேல்முருகன்:
பின் இந்த சம்பவம் குறித்து உதவி மேலாளர் வடிவேல், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பாடகர் வேல்முருகன் மீது புகார் அளித்திருக்கிறார். இதை அடுத்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் பாடகர் வேல்முருகனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பின் வேல்முருகன் அவர்கள் தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். தற்போது இந்த சம்பவம் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
விமான நிலையத்தில் ரகளை :
கடந்த மாதம் 1ஆம் தேதி மாலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்குசென்று இருந்தார். அப்போது அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர் குடிபோதையில் இருந்ததாக கூறி அவரை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துஇருந்தனர். இதனால் கோபமடைந்த வேல்முருகன் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்காவாதத்தில் ஈடுபட்டார்.
https://www.youtube.com/shorts/-0uU6IP468I
மீண்டும் ரகளை :
அவர் எவ்வளவோ வாக்குவாதம் செய்தும் அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே விட மறுத்துள்ளனர் இதனால் தன்னுடைய பயணத்தை ரத்து செய்து இருந்தார் வேல்முருகன். இதனைத் தொடர்ந்து அவர் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்ட பின்னர் அவரை வேறு ஒரு விமானத்தில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். விமான நிலைய அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது ஒரு மாதம் கழித்து மீண்டும் ரகளையில் ஈடுபட்டுள்ளார் வேல் முருகன்.





