சென்னை விமான நிலையத்தில் குடி போதையில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நாட்டுப்புற பாடகர் வேல் முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகராக திகழ்பவர் வேல்முருகன். இவர் விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர். இவர் பின்னணி பாடகர் மட்டுமில்லாமல் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் இவர் நாட்டுப்புற பாடகராகத் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமானார். அதற்குப் பிறகு தான் இவர் சினிமாவில் களம் இறங்கினார்.
https://twitter.com/mahajournalist/status/1763894512643191177
இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் ‘மதுர குலுங்க’ என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஜேம்ஸ் வசந்தனால் தான் இவருடைய திரை பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இவர் நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால, கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தி இருக்கிறார்.
வேல்முருகனின் திரைப்பயணம்:
கடைசியாக இவர் ஜி வி பிரகாஷ் இசையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த அசுரன் படத்தில் கத்தரி பூவழகி என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலுக்காக இவர் பல விருதுகளை வாங்கி இருந்தார். தற்போதும் இவர் பல படங்களில் கமிட்டாகி பாடுவது மட்டும் இல்லாமல் நடித்து கொண்டும் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக வேல் முருகன் கலந்து கொண்டிருந்தார்.
https://www.youtube.com/shorts/rhotEkz73qk
வேல்முருகன் குடும்பம்:
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். ஆனால், இவரால் நீண்டநாள் பிக்பாஸ் வீட்டில் நீடித்திருக்க முடியவில்லை. அதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 2 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தன் மனைவியுடன் பங்குபெற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய திறமை, நடிப்பெல்லாம் மக்கள் மத்தியில் பாராட்டுக்குரிய வகையில் இருந்தது.
விமான நிலையத்தில் ரகளை :
இப்படி ஒரு நிலையில் பாடகர் வேல்முருகன் நேற்று மாலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர் குடிபோதையில் இருந்ததாக கூறி அவரை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து இருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த வேல்முருகன் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்காவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
https://www.youtube.com/shorts/-0uU6IP468I
அவர் எவ்வளவோ வாக்குவாதம் செய்தும் அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே விட மறுத்துள்ளனர் இதனால் தன்னுடைய பயணத்தை ரத்து செய்து இருக்கிறார் வேல்முருகன் இதனைத் தொடர்ந்து அவர் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்ட பின்னர் அவரை வேறு ஒரு விமானத்தில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர் விமான நிலைய அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர் எந்த நிலையில் வேல்முருகன் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது





